மீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்த சூர்யகுமார் யாதவ்!

Photo of author

By Vinoth

மீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்த சூர்யகுமார் யாதவ்!

Vinoth

மீண்டும் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்த சூர்யகுமார் யாதவ்!

சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து டி 20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடி இருந்தார்.

இதனால், ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா மைதானத்தைச் சுற்றி 360 டிகிரி ஸ்கோர் செய்கிறார், அவர் ஏபி டி வில்லியர்ஸ் செய்ததைப் போல ஷாட்களை ஆடி வருகிறார்” என்று கூறி பாராட்டி இருந்தார். ஆனால் வேறு சில முன்னாள்  வீரர்கள் டிவில்லியர்ஸுடன் அவரை ஒப்பிடும் அள்வுக்கு இன்னும் அவர் சாதனைகள் படைக்கவில்லை என்று கூறி இருந்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களுக்கு இடம்பிடித்தார்.

இந்நிலையில் இப்போது அவர் தரவரிசையில் 801 புள்ளிகளோடு இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 861 புள்ளிகளோடு முதல் இடத்தில் இடம்பிடித்துள்ளார். இந்த ஆண்டில் சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் 700 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு ஆண்டில் இந்திய பேட்ஸ்மேன் அடித்த அதிக ஸ்கோராகும்.