ஃபிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவிற்கு நடந்த கொடுமை – வெளியான தகவல் – அப்செட்டான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவருடைய லியோ படத்தை பார்க்க இவரது ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல், எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனுமாவார். தமிழ் திரையுலகத்தில் ‘நேருக்கு நேர்’ படத்தில் முதல்முறையாக அவர் ஹீரோவா நடித்தார். குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மாறினார்.
அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். 3 முறை ‘தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது’, 3 முறை ‘ஃபிலிம்ஃபேர் விருது’, 4 முறை ‘விஜய் விருது’ என பல விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில், விஜய், சூர்யா குறித்து ஒரு சில தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, கடந்த 2001ம் ஆண்டு நடிகர் விஜய், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘ஃபிரண்ட்ஸ்’. இப்படத்தில் வடிவேலு நேசமணியாக நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
இப்படத்தில் விஜய்யின் தங்கை விஜயலட்சுமியைதான் சூர்யா காதலிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டது. சூர்யாவிற்கும், நிறைய காட்சிகளை இயக்குனர் எடுத்தாராம். ஆனால், பல காட்சிகளை விஜய் தரப்பு வெட்ட சொல்லிவிட்டார்களாம். இதனால், சூர்யா ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம்.
விஜய் தன் நண்பர். தன்னை விட பெரிய ஹீரோ என்று கோபத்தை தனக்குள் வைத்துக் கொண்டு வெளியே காட்டமுடியவில்லையாம். இப்போ அதே சூர்யா முன்னேறி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் ரொம்பவே அட்செட்டாகிவிட்டனராம்.