இந்தியாவில் விமானங்கள் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்தால் வைஃபை சேவைகளை இணைக்க முடியும் என்றும் அதுவரை மட்டுமே அனுமதி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2018 ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 2024 ஆன இந்த ஆண்டுதான் இதில் சில திருத்தங்களை செய்து இதன் வரம்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தில் வை-பை பயன்படுத்துவதை தாண்டி விமானத்தில் பயணிக்கும் மக்கள் அனைவரும் 3000 மீட்டர் அல்லது பத்தாயிரம் அடி உயரத்தில் பறக்கும் பொழுதும் மட்டுமே வைபை சேவையினை பயன்படுத்த முடியும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் சர்வதேச விமானப் பயண வைஃபை சேவை தரங்களுக்கு இணங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும், உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் விமானங்கள் 3 ஆயிரம் மீட்டர் உயரத்தை அடைந்த பிறகு தான் வைபை பயன்படுத்துகின்றனர் அதேபோன்று இந்தியாவிலும் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பயணிகள் எதிர்பார்க்கும் இணைய இணைப்பினை பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றிச் செயல்படுத்தப்பட்டுள்ளதால், விமானங்களின் தடை இல்லாமல் பயணிகள் வைஃபை பயன்பாட்டை அனுபவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.