சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ்.!!

Photo of author

By Vijay

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

நடிகர் சூர்யா தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் தலைப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தலைப்பு வைரலாகிய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளனர். மேலும், இந்த படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்படுவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே, அவர் நடித்துள்ள நந்தா, ரத்த சரித்திரம் ஆகிய திரைப்படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.