அன்றே கணித்த சூர்யா!! ட்ரெண்டிங் மீம்ஸ்!! பங்கமாக வெச்சி செஞ்சிடங்க!!

Photo of author

By CineDesk

அன்றே கணித்த சூர்யா!! ட்ரெண்டிங் மீம்ஸ்!! பங்கமாக வெச்சி செஞ்சிடங்க!!

நடிகர் சூர்யாவை பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள் என்று கூறலாம். ஏனெனில் சூர்யா நடிப்பிலும் பொது சேவையிலும் மிகவும் ஆர்வம் உள்ளவர். இவர் பல சேவை மையங்களை நடத்தி வருகிறார். இவரின் அகரம் பவுண்டேஷன் எனும் சேவையானது படிக்க முடியாத ஏழை மாணவர்களுக்கும் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளுக்கும் மிகவும் உதவும் வகையில் உள்ளது. இந்த அகரம் பவுண்டேசன் மூலம் பல லட்சம் மாணவர்கள் உதவிகளை பெற்று வருகின்றனர். இவருடன் நடித்த நடிகைகள் மற்றும் நடிகர்கள் அனைவரும் இவரின் பண்பையும் திறமையையும் பற்றி பேசாமல் இருக்கவே மாட்டார்கள்.

என்றே கூறலாம். இவரை ரியல் ஹீரோ என்று பலரும் குறிப்பிட்டு கூறுவதை நாம் பார்த்திருப்போம். நடிகர் சூர்யா பல வெற்றிப்படங்களில் நடித்து உள்ளார். இவரின் திறமையும் பண்பும் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றே கூறலாம். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்றுவரும் இயற்கை நிகழ்வுகள் அனைத்தும் சூர்யாவின் படங்ககளில் வரும் காட்சிகள் போலவே உள்ளதாக கூறி மீம் கிரியேடர்கள் # அன்றே கணித்த சூர்யா என்ற ஹஸ்டகை பரப்பி வருகிறார்கள். இந்த மீம்களில் சூர்யா நடித்த படத்தின் கதை, பாடல், வசனம் மற்றும் சீன்களை கொண்டு மீம்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த மீம்கள் மிகவும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் இந்த ஹஸ்டக் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. சூர்யா நடித்த வெற்றிப்படமான ஏழாம் அறிவு பரத்தை படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் கொரோனா தொற்றின் பாதிப்பு போலவே உள்ளதாக கூறி அன்றே கணித்த சூர்யா என்று மீம்களை உருவாக்கியுள்ளனர்.


மேலும் காப்பான் படத்தில் வரும் வெட்டுக்கிளியின் காட்சிகள், சென்ற ஆண்டு பாகிஸ்தானில் நடந்த வெட்டுக்கிளியின் சம்பவம் போன்று உள்ளது எனவும் கூறி இந்த ஹஸ்டாகை பரப்பி வருகின்றனர். மேலும் சூர்யாவின் பல படங்களில் வரும் காட்சிகளையும் பாடல்களையும் கொண்டு மீம்களை கிரியேட் செய்து வருகின்றனர். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். ஏனெனில் சூரியா நடித்த படங்கள் எல்லாம் விழிப்புணர்வுக்காக தான், இதில் அவரின் தவறு என்ன இருக்கிறது என்று கூறி இந்த ஹஸ்டக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக சூர்யாவின் பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்ட ஹஸ்டக் தான் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.