இன்று முதல்… தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு இது கட்டாயம்!! அரசு அதிரடி!!

0
91

இன்று முதல்… தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு இது கட்டாயம்!! அரசு அதிரடி!!

கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறக்கப்பட்டன. மேலும், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு, முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு என்று பல உரடங்குகள் போடப்பட்டு மக்களை பாதுகாப்பதற்காக பல நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து விதமான நோய்களிலிருந்து மக்களைக் காப்பதற்கு பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு செய்து கொண்டு வருகிறது.

அதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் நீயூமோகோக்கல் காஞ்ஜூகோட் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் மூன்று தவணையாய் போடப்படும் இந்த தடுப்பூசி தனியார் மருத்துவமனைக்கு 4 ஆயிரம் வீதம் 12 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இன்று முதல் குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது. அரசு சுகாதார மருத்துவ மனைகளிலும், பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிமோனியா தடுப்பூசி இலவசமாக போட்டுக் கொள்ளலாம்.

மேலும் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு மாதம் மூன்று மாதம் மட்டும் ஒன்பது மாதங்களில் மூன்று தவணைகள் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இந்த தடுப்பூசிகளை பெற்றோர்கள், குழந்தைகளை அழைத்துச் சென்று தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து தனியார் மருத்துவமனைகளில் 4ஆயிரம் வீதம் 12 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்ந்து தற்போது அரசு பொது சுகாதார மருத்துவமனைகளில் இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது.

author avatar
Jayachithra