டி 20 போட்டிகளில் 1000 ரன்களை எட்டிய சூர்யகுமார் யாதவ்… படைத்த சாதனைகள் இதோ!

0
148

டி 20 போட்டிகளில் 1000 ரன்களை எட்டிய சூர்யகுமார் யாதவ்… படைத்த சாதனைகள் இதோ!

இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்துள்ளார்.

சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடி இருந்தார்.

இதனால் அவரை ரசிகர்கள் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸோடு ஒப்பிட்டு வருகின்றனர். இப்போது அவர் டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் நேற்றைய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அதிரடி ஆட்டத்தால் அவர் சர்வதேச போட்டிகளில் 1000 ரன்களை சேர்த்துள்ளார்.

மிகக்குறைவான பந்துகளில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். 1000 ரன்களை சேர்க்க அவர் 573 பந்துகளை எடுத்துகொண்டுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 174 ஆக உள்ளது. வேறு எவரும் இவ்வளவு குறைவான பந்துகளில் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.

மேலும் இந்திய அளவில் மிகக் குறைவான இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை சேர்த்த மூன்றாவது பேட்ஸ்மேனாக சூர்யகுமார் உள்ளார். அவருக்கு முன்பாக கோலி, மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Previous articleபோட்டிக்கு இடையே அழையா விருந்தாளியாக வந்த பாம்பு…. அதிர்ச்சி தருணம்!
Next articleதமிழகம் மற்றும் கேரள மாநில ஆர் எஸ் எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் உயிருக்கு ஆபத்து! உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை!