சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலை! மருத்துவர் பரபரப்பு பேட்டி!!

Photo of author

By Pavithra

சுஷாந்த் சிங் மரணம் தற்கொலை அல்ல கொலை! மருத்துவர் பரபரப்பு பேட்டி!!

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்தார்.இவரது மேலாளர் திஷா சாலியன் என்பவர் அதே 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம்
8ம் தேதி அவரது வீட்டின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலாளர் இறந்த சில நாட்களிலேயே சுஷாந்த் மர்மமான முறையில் இறந்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இந்த வழக்கானது
சிபிஐ இடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது வரை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் பாலிவுட் மட்டும்மின்றி மகாராஷ்டிரா அரசியலிலும் இந்த சம்பவம் பெரும் விவாதப் பொருளாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இவரது மேலாளரான திஷா சாலியன் மரணம் குறித்து சிறப்பு விசாரணை குழுவினை அமைக்க மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டது.

இந்தவழக்கு தொடர்பாக ஆதாரங்கள் ஏதேனும் கிடைக்கப்பெற்றாலும் அல்லது இருந்தாலும் அதனை சம்பந்தப்பட்டவர்கள் சிறப்பு விசாரணை குழுவிடம் சமர்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கில் தற்போது பல திடுக்கிடும் பரபரப்பு தகவல்களை மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.சுஷாந்தின் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவமனை பணியாளர் ரூப்குமார் ஷா என்பவர் சமீபத்தில் தனியார் மீடியாவுக்கு ஒன்றினுக்கு பேட்டி அளித்திருந்தார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

‘சுஷாந்த் சிங் இறந்தபோது, கூப்பர் (cooper hospital) மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக 5 இறந்த உடல்கள் கொண்டுவரப்பட்டது. அந்த ஐந்து உடல்களில் ஒன்று விஐபி உடல்.

நாங்கள் பிரேத பரிசோதனை செய்ய சென்றபோது, அவர் சுஷாந்த் என்றும், அவரது உடலில் பல அடையாளங்களும், கழுத்தில் 2 முதல் 3 அடையாளங்களும் இருப்பதும் தெரியவந்தது. சுஷாந்தின் கழுத்தில் 3 இடங்களில் காயங்கள் இருந்தது. அவரின் உடலை பார்த்ததுமே அவர் கொலை செய்யப்பட்டிருப்பதை நான் அறிந்தேன். பின்பு சுஷாந்த் கொலை தொடர்பாக என் சீனியரிடம் சொன்ன போது அவர் ஏதும் கண்டுகொள்ளவில்லை.என்று அவர் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கை குறித்து மருத்துவர் அளித்த பேட்டி பெறும் பரப்பரப்பையும் மக்களிடையே பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.