உங்கள் முகத்தில் வியர்வை அருவி போல் கொட்டுகிறதா? அப்போ இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்கள்!!
உங்களில் சிலருக்கு கை,கால்,முகம்,தலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு வியர்க்கும்.பதட்டம்,பயம்,வெப்பம் போன்ற காரணங்களால் இது போன்று வியர்வை வெளியேறுகிறது.
உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது நல்லது தான் என்றாலும் அவை அளவிற்கு அதிகமாக வெளியேறினால் அசௌகரிய சூழலை ஏற்படுத்தி விடும்.வியர்வை மூலம் உடலிலுள்ள உப்பு,கிருமிகள் வெளியேறி வருகிறது.அந்தரங்க பகுதி,அக்குள் பகுதியில் அதிகளவு வியர்வை சுரந்தால் அவை துர்நாற்றத்தை வெளியேற்றும்.இதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பல இயற்கை வழிகள் உள்ளது.
அதேபோல் முகம் மற்றும் தலையில் இருந்து அதிகளவு வியர்வை வெளியேறினால் அவை சரும அழகை முழுமையாக கெடுத்துவிடும்.குறிப்பாக பெண்களுக்கு இவை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.முகத்தில் அதிகளவு வியர்த்தால் அவை போட்டிருக்கும் மேக்கப்பை களைத்து விடும்.இதனால் கர்சீப்,டவல் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தும் நிலை ஏற்படும்.
ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை பின்பற்றி வந்தால் முகத்தில் இருந்து வியர்வை வெளியேறுவது முழுமையாக கட்டுப்படும்.
முதலில் பதட்டம்,பயத்தை கட்டுப்படுத்த வேண்டும்.மனதை ஒரு நிலையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.முகத்தில் எண்ணெய் பிசுக்கு சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்த வேண்டும்.
முகத்தில் வியர்வை வெளியேறத் தொடங்கினால் அதை சுத்தமான காட்டன் துணி பயன்படுத்தி துடைக்க வேண்டும்.அதிகளவு வியர்வை வெளியேறுபவர்கள் அதற்கேற்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
முகத்திற்கு மேக்கப் போடுவதை குறைத்துக் கொண்டு முகத்தில் எண்ணெய் மற்றும் வியர்வை சுரக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.பச்சைப்பயறு,கடலைமாவு,வெந்தயம் ஆகிய பொருட்களை அரைத்து பேஸ்டாக்கி முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் எண்ணெய் பிசுக்கு,வியர்வை சுரப்பது கட்டுப்படும்.