ஆடை நனையும் அளவிற்கு வியர்க்கிறதா? இதை செய்தால் இனி சொட்டு வியர்வை கூட வெளியேறாது!!

Photo of author

By Divya

ஆடை நனையும் அளவிற்கு வியர்க்கிறதா? இதை செய்தால் இனி சொட்டு வியர்வை கூட வெளியேறாது!!

பொதுவாக வியர்த்தல் உடலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வியர்வை மூலம் வெளியேறி உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது.ஆனால் அளவை மீறி வியர்த்தல் அவை உடலை வறட்சி அடைய செய்து விடும்.

அதுமட்டும் இன்றி உடலில் அதிகளவு வியர்த்தால் அவை துர்நாற்றத்தை உண்டாக்கும்.இந்த வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த பவுடர்,வாசனை திரவியங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை முழுமையாக தவிர்க்கவும்.

ஒருசிலருக்கு சாதாரணமாகவே உடலில் அதிகளவு வியர்வை வெளியேறும்.இந்த அதிகப்படியான வியர்வை பிரச்சனையை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்திய குறிப்புகளை பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)வினிகர்
2)ஆப்பிள் சீடர் வினிகர்

செய்முறை:-

நீங்கள் குளிக்கும் தண்ணீரில் 2 தேக்கரண்டி வினிகர் மற்றும் 2 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இந்த நீரில் குளிப்பதன் மூலம் உடல் வியர்வையை கட்டுப்படுத்த முடியும்.

தேவையான பொருட்கள்:-

1)உருளைக்கிழங்கு

செய்முறை:-

ஒரு உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.

பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் கழித்து குளித்தால் உடல் வியர்வை கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)கற்பூரம்

செய்முறை:-

100 மில்லி அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயை வாணியில் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 2 கற்பூரம்(சூடத்தை) போட்டு 2 நிமிடத்திற்கு காய்ச்சவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு இரவு நேரத்தில் உடல் முழுவதும் பூசி காலையில் குளித்து வந்தால் உடல் வியர்வை கட்டுப்படும்.இந்த இயற்கை வைத்தியங்கள் அனைத்தும் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்த உதவும்.