இனிப்பான செய்தி!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு – மத்திய அரசு அதிரடி!
தற்பொழுது நகர்ப்புறம்,கிராமப்புறம் என்று அனைத்து இடங்களிலும் உள்ள வீடுகளில் சமையலுக்கு எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலையானது தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது.இதனால் சாமானிய பெருமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.பெரும்பாலானோர் இதன் விலை அதிகரிப்பால் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எல்.பி.ஜி சிலிண்டருக்கான விலை ரூ.200 குறைக்கப்டுவதாக மத்திய அரசு அறிவித்தது.உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு பயன்படுத்தி வரும் மக்களுக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.இதனை தொடர்ந்து தற்பொழுது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி வணிக உபயோகத்திற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரூ.92.50 குறைந்து ரூ.1,852.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் செப்டம்பர் 1 ஆன இன்று இதன் விலை ரூ. 157.50 குறைக்கப்பட்டு ரூ1,695க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானா,திரிபுரா,மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வரவிருக்கும் காரணத்தினால் அனைத்து மாநில தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன்படி மக்களை கவருவதற்காக தற்பொழுது வீடு மற்றும் வணீக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்து அதிரடி காட்டியுள்ளது.இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகளை கவருவதற்காக பெட்ரோல்,டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முயன்று வருகிறது.