அல்சர் புண்களை ஆற்றும் குச்சிக்கிழங்கு மாவு!! இதை எப்படி பயன்படுத்துவது!!

0
140
Sweet enough Elure heals ulcers!! How To Use It!!
Sweet enough Elure heals ulcers!! How To Use It!!

அல்சர் புண்களை ஆற்றும் குச்சிக்கிழங்கு மாவு!! இதை எப்படி பயன்படுத்துவது!!

நாம் உண்ணும் கிழங்கு வகைகளில் ஒன்று மரவள்ளி(குச்சிக்கிழங்கு).இவற்றை தோல் நீக்கி உப்பு சேர்த்து வேகவைத்து உண்டு வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.மரவள்ளி கிழங்கில் இருக்கின்ற வைட்டமின்கள்,கால்சியம்,பாஸ்பரஸ்,கார்போ ஹைட்ரேட் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

இந்த மரவள்ளி கிழங்கை பொடி செய்து கஞ்சி தயாரித்து குடித்து வந்தால் அல்சர்,இரத்த சோகை,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)மரவள்ளி கிழங்கு மாவு – 25 கிராம்
2)உப்பு – தேவையான அளவு
3)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
4)சீரகம் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி சுடுநீர் போட்டு அலசிக் கொள்ளவும்.பிறகு அதை துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.பின்னர் ஒரு கிண்ணம் எடுத்து அரைத்த மரவள்ளி கிழங்கு பொடி 25 கிராம் அளவு சேர்க்கவும்.அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைக்கவும்.

இந்த மரவள்ளி கிழங்கு கரைசலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து வேக விடவும்.2 நிமிடஙள் கழித்து சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி சீரகம் அல்லது 1/4 தேக்கரண்டி சீரகப் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி குடிக்கவும்.இந்த மரவள்ளி கிழங்கு கஞ்சி அல்சர் புண்களை ஆற்ற உதவுகிறது.

அது மட்டுமின்றி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.மரவள்ளி கிழங்கில் இருக்கின்ற இரும்பு சத்து இரத்த சோகையை போக்க உதவுகிறது.செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இதில் இருக்கின்ற நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.