கோவையில் இரண்டு பேருக்கு ஏற்பட்ட பன்றி காய்ச்சல்! 13 பேருக்கு தீவிர பரிசோதனை!

Photo of author

By Hasini

கோவையில் இரண்டு பேருக்கு ஏற்பட்ட பன்றி காய்ச்சல்! 13 பேருக்கு தீவிர பரிசோதனை!

கோவையில் தற்போது இரண்டு பெண்களுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு, சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். தற்போது எல்லா இடங்களிலும் கோரோனாவை தொடர்ந்து பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்துள்ளது.

அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சலும் அதிகளவில் பரவி வருகின்றது. எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், வெளியே சென்று வந்தால் கை, கால்கள் மற்றும் முகம் கழுவியும், வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லவும் வலியுறுத்தப்படுகின்றனர். தற்போது இரண்டு பெண்களுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அதை பரிசோதனை செய்ய ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அவர்கள் அந்த ஆய்வின் முடிவில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யும் வரை 13 பேரையும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் வெளியில் வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும், வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்றும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்யுமாறு கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் யாருக்காவது காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற ஏதேனும் புதிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி, மருத்துவரிடன்  சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இரண்டு பெண்களுக்கு  உறுதி செய்யப்பட்டுள்ளது அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.