ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!  

0
253

 

ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!

 

 

மனித உடலில் மிக முக்கியமானது இரத்தம் தான் அந்த இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்று கூறலாம். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அளவு ஆகும்.

 

போதியளவு பிராணவாயு சுவாசிக்காததால் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சுவாசத்தில் பிராணவாயு குறைந்தால் மயக்கம் மற்றும் முச்சுத்திணறல் ஏற்படும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த வகையான பிரச்சினை ஏற்படுவது வழக்கமாகும்.

 

மேலும் இரத்த சோகையில் 3 வகைகள் உண்டு. வைட்டமின் C மற்றும் B-12 குறைபாடு காரணமாக ஏற்படும். மேலும் அதே போல் இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவும் இரத்த சிவப்பணுக்கள் குறைய வாய்ப்பு உண்டு. இதனை இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை என்று கூறுவர்கள். நோய்தொற்று காரணமாக ஏற்படும் இரத்த சோகை, குரோனிக் அனீமியா என்று அழைக்கப்படுகிறது.

 

 

இந்த இரத்த சோகைக்கான அறிகுறிகள் முதலில் மயக்கம்உடற்சோர்வு,தலைவலிதோல் வெளுத்தல்,உடல் வெப்பம் குறைதல்,பசியின்மைநெஞ்சுவலி,சீரற்ற இதயத்துடிப்புவாய் மற்றும் நாக்கில் வீக்கம்முச்சுத்திணறல் போன்றவைகள் காணப்படும்.

 

மேலும் இரத்த சோகை ஏற்பட காரணம்.

உடலில் வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுதன்னெதிர்ப்பு நோய்கள்,இரத்தப்போக்கு மருந்து, மாத்திரைகள் தான் காரணம்மாக அமைகிறது.

 

பொதுவாக இரத்த சோகை யாரை பாதிக்கும் என்றால் பெண்களுக்கு

மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள்கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள்வைட்டமின், இரும்புச்சத்து குறைவாக எடுத்துக்கொள்வோர் மற்றும் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இரத்த சோகை ஏற்பட வாய்ப்பயுள்ளது. இந்த

இரத்த சோகையை குணமாக்க சில வழிமுறைகள் உள்ளது அவை இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு வகைகள், சோயா பன்னீர், பச்சை நிறக் காய்கறிகள், மாதுளைப் பழம், முருங்கைக் கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு, ஆலிவ் ஆகிய உணவுகள் சாப்பிட வேன்டும். மேலும் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் சாப்பிட வேன்டும்.இரத்த சோகைக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும்.

மருத்துவர் பரிந்துரைக்கும் உட்டச்சத்து உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

Previous articleநோக்கியோ நிறுவனத்திற்கு வெற்றி! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!  
Next articleமுழங்கை கருமை நீங்க! இதனை செய்து பாருங்கள்!