உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கால்களில் ஏற்படும் அறிகுறிகள்!! ஜாக்கிரதை!! 

Photo of author

By Amutha

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கால்களில் ஏற்படும் அறிகுறிகள்!! ஜாக்கிரதை!! 

Amutha

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் கால்களில் ஏற்படும் அறிகுறிகள்!! ஜாக்கிரதை!! 

இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் மற்றும் இரத்தத்தின் விசை அதிகமாக இருக்கும்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.  120/80 அல்லது அதற்கும் குறைவான அளவு இருந்தால் அது சாதாரண அழுத்தம் என்றும், 130/80 அல்லது அதற்கு மேல் இருந்தால் அது உயர் இரத்த அழுத்தமாகக் கருதப்படுகிறது.  அதுவே இரத்த அழுத்தம் 180/110 அல்லது அதற்கு மேல் இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

உயர் ரத்த அழுத்தம் என்பது சமீப காலமாக பலரையும் பாதித்து வருகிறது. இது பொதுவாக சைலன்ட் கில்லர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஏனெனில் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் இது என்று கூறும் அளவுக்கு வெளிப்படையான அறிகுறிகள் இல்லை.

இது உறுப்புகளை பாதிக்கத் தொடங்கும் வரை இதை கண்டுபிடிப்பது கடினமாகும்.

இதயத்தின் செயல்பாடு குறைவது முதல் சீரற்ற ரத்த ஓட்டம் சிறுநீரகங்கள் சேதப்படுத்துவது வரை இதன் பாதிப்பு இருக்கும்.

கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தத்தை சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று சரி செய்யவில்லை எனில் பல அபாயங்களை நாம் எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.

உயர் ரத்த அழுத்தம் நரம்பில் உள்ள மென்மையான திசுக்களை சேதப்படுத்தும்.ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் பாதங்கள் ஜில்லென்று இருக்கும்.

சிவப்பு அல்லது நீல நிறத்தில் கால் விரல்களை நாம் காணலாம்.

கால்கள் மற்றும் பாதங்களில் ஏற்படும் கூடுதல் கூச்ச உணர்வு. கால்களில் ஏற்படும் எதிர்பாராத முடி உதிர்வு.

கால்களில் உணர்வின்மை அல்லது பலவீனம். கால்களில் பலவீனமான துடிப்பு.

கால்களில் பாதங்களில் பளபளப்பான தோல். கால் நகங்களின் வளர்ச்சி குன்றி போவது, கால் நகங்கள் உடைவது.

கால் விரல்கள், கால்கள் அல்லது பாதங்களில் வரும் புண்கள் குணமடையாமல் இருப்பது.