இந்த அறிகுறிகள் உடம்பில் உள்ளதா? நீங்கள் உஷாராக வேண்டிய நேரம்

Photo of author

By Parthipan K

கொரோனா என்ற பெருந்தொற்று வந்த பிறகு தான் நமக்கு நோயெதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வே வந்து இருக்கிறது

உடலில் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களே அதிகமான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். அடிக்கடி நோய் தொற்றுக்கு ஆளாவது, அடிக்கடி சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுவது, குளிர்காலத்தில் மூச்சுத்திணறல், ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவை நோய் எதிர்ப்பு சக்தி பலவீனத்தின் காரணிகளாகும். நல்ல உணவு முறை பழக்கத்தின் மூலம் இழந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடலாம்.

நவீன வாழ்க்கை முறையினால் சரியான தூக்கம் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, மன அழுத்தம், மாசுபாடான சுற்றுசூழல், வயது போன்ற காரணிகளே நமது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாவதற்கு காரணமாக அமைகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை ஒரு சில அறிகுறிகளின் மூலம் கண்டுபிடித்து விடலாம்.

*. மன அழுத்தம்

மன அழுத்தம் அதிகமாக இருந்தால் நம்முடைய தூக்க சுழற்சிமுறை பாதிக்கப்படும், ஹார்மோன்கள் பாதிக்கப்படும், எடை அதிகரிக்கும், இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு இது மிக முக்கிய காரணம்.

*.தொற்று ஏற்படுவது

காது, மூக்கு, தொண்டை பகுதியில் அடிக்கடி தொற்று ஏற்படுவதும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான அறிகுறிகளாகும். இத்தகைய தொற்றுகள் அடிக்கடி ஏற்பட்டால் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை தொடங்கிட வேண்டும்.

*.நோய் வருதல்:

ஒருவர் அடிக்கடி நோய் வாய்ப்படுகிறார் என்றால் அவரது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கிறது என்றே அர்த்தம். மேலும் நோயிலிருந்து மீண்டு வரும் காலத்தையும் நீட்டிக்கும்.

*.சோர்வாக உணர்தல்

நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக கொண்டவர்கள் எப்போதும் சோர்வாகவே உணருவார்கள். ஒருவித மந்த நிலையை அவர்கள் உணரக்கூடும். உடலில் ஆற்றல் இல்லாத தன்மையை உணரும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழிகளை கையாள தொடங்க வேண்டும்.

*.வானவில் உணவு பழக்கம்:

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்ததும், பல்வேறு வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டதுமான வானவில் உணவு பழக்கத்தை பின்பற்றலாம். புரோபயாடிக் உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.

இங்கிலாந்தில் உள்ள லாக்பரோ பல்கலைக்கழகம் மூலம் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 16 வாரங்களுக்கு தினமும் புளித்த தயிர் (யோகர்ட்) சாப்பிடுமாறு அறிவுறுத்தினார்கள் .ஆய்வு முடிவில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், சுவாச நோய்த்தொற்று ஏற்படுவதை 50 சதவீதம் குறைக்கவும் யோகர்ட் உதவியது உறுதி செய்யப்பட்டது.