T20-உலகக்கோப்பை: இந்தியா வெற்றி பெற பெங்களூருவில் சிறப்பு பூஜை.!!

0
181

இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் டி20 உலக கோப்பை நடைபெற்று வருகிறது. இதில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. அதில், இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

இதில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

டி20 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டி ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தி பிரார்த்தனை செய்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

அதேபோல், டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் இன்றைய போட்டியை காண வரும் வாடிக்கையாளர்களுக்கு உணவு கட்டணத்தில் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

Previous articleதமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!
Next articleதமிழகத்தில் தண்ணீர் கலந்து பெட்ரோல் விற்பனை.! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!