பழனிச்சாமி போட்ட கணக்கு!. டிடிவி தினகரன் மீதான வழக்கு வாபஸ்!.. காரணம் இதுதானா?!..

ttv

எல்லோரும் எதிர்பார்த்தபடி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது அதிமுக. செய்தியாளர்களிடம் பேசிய அமித்ச்ஷா ‘ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் கூட்டணியை ஏற்பது அதிமுகவின் முடிவு. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். அதிமுகவின் தனிப்பட்ட விஷயங்களில் பாஜக தலையிடாது. தேர்தல் விவகாரங்களில் மட்டுமே பங்கேற்போம். யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என கூறியிருந்தார். ஒருபக்கம், இந்த கூட்டணி இணைய … Read more

அதிமுகவுக்கு எண்ட் கார்டு!.. அமித்ஷாவோட பிளானே இதுதான்!.. ஐடியா இல்லாத பழனிச்சாமி!..

admk

பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் எந்த கட்சி வலிமையோடு இருக்கிறதோ அதோடு கூட்டணி வைத்து ஒருகட்டத்தில் அந்த கட்சியை பிளவுப்படுத்தி டம்மியாக்கி வருமான வரித்துறை ரெய்டு போன்றவற்றை வைத்து மிரட்டி பாஜகவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அந்த மாநிலத்தில் வலிமை பெற்ற கட்சியாக பாஜகவை மாற வைப்பதுதான் பாஜகவின் ராஜ தந்திரம். இதை மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பாக செய்வார். ஆந்திரா, கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் இதை செய்தும் காட்டியிருக்கிறார். பாஜக எப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்தார்களோ … Read more

அமித்ஷாவுடன் கை கோர்த்த பழனிச்சாமி!.. தனிக்கட்சி துவங்கும் ஒ.பி.எஸ்?!…

ops

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவுடன் கிட்டத்தட்ட அரசியல் அநாதை ஆகிவிட்டார் ஓபிஎஸ். அதிமுக ஆட்சியின் போது மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். சசிகலாவுடன் மோதல், ஜெ.சமாதியில் தியானம், பரப்பு பேட்டி, ஜெ.வின் மரணத்திற்காக தர்ம யுத்தம், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எனக்குதான் என நீதிமன்றம் போனது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இவர். இவரை தூக்கிவிட்டு முதல்வர் பதவியில் பழனிச்சாமியை அமர வைத்துவிட்டு சிறைக்கு போனார் சசிகலா. அமித்ஷா எடுத்த முயற்சியில் பழனிச்சாமியோடு ஓபிஎஸ் இணைந்து அதிமுகவில் … Read more

பழனிச்சாமி போட்ட கண்டிஷன்!.. அடங்கிப்போன அமித்ஷா!.. நடந்தது இதுதான்!..

eps

எல்லோரும் எதிர்பார்த்தபடி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது அதிமுக. நேற்று இரவு சென்னை வந்த அமித்ஷா சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இன்று காலை முதல் அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பின் அதே ஹோட்டலில் 5 மணிக்கு மேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமித்ஷாவுடன் பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தார்கள். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா ‘2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் … Read more

அந்த பேச்சுக்கே இடமில்லை!.. அமித்ஷா பிளானை தவிடு பொடியாக்கிய பழனிச்சாமி!.

eps

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைய வேண்டும் என நினைக்கிறார் அமித்ஷா. இதற்கு அர்த்தம் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்க வேண்டும் என்பது இல்லை.. இந்திய ஜனநாயக கூட்டணி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்பதே அமித்ஷாவின் திட்டமாக இருக்கிறது. ஆனால், பழனிச்சாமிக்கு இதில் விருப்பமில்லை. அதனால்தான் தயங்கி கொண்டிருக்கிறார். பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரனின் அமுமக ஆகிவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது அமித்ஷாவின் … Read more

அமித்ஷாவை பார்க்கணும்!.. ஏற்பாடு பண்ணுங்க ப்ளீஸ்!. கெஞ்சினாரா ஓபிஎஸ்?!…

ops

ஜெயலலிதா கருணையால் 3 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெ.வின் மறைவுக்கு பின்னரும் சசிகலா இவரையே முதல்வராக நியமித்தார். எனவே, கெத்தாக வலம் வந்து கொண்டிருந்தார் ஓபிஎஸ். ஆனால், திமுகவுடன் நெருக்கம் காட்டுவதாக சொல்லி இவரை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார் சசிகலா. அந்த கோபத்தில் ஜெ.வின் சமாதியில் போய் அமர்ந்து தியானம் செய்தார் ஓபிஎஸ். அதன்பின் செய்தியாளர்களிடம் என்னை மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் என பேட்டி கொடுத்து பரபரப்பை உண்டாக்கினார். மேலும், … Read more

சென்னை வரும் அமித்ஷா!. அதிமுகவினரிடம் வருமான வரித்துறை ரெய்டு!. கூட்டணிக்கு அழுத்தமா?!..

eps

பாஜக எப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்ததோ அப்போதே தங்களின் காரியங்களை சாதிக்க வருமான வரித்துறையை பயன்படுத்த துவங்கினார்கள். தங்களுடன் கூட்டணியில் சேராதவர்கள், எதிர்த்து பேசுபவர்கள், அரசியல்ரீதியாக குடைச்சல் கொடுப்பவர்கள் என பலரையும் டார்கெட் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவி விடுகிறார்கள். நடிகர் விஜய் மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி ஒரு வசனம் பேசிவிட்டார் என்பதற்காக நெய்வேலியில் மாஸ்டர் படத்தில் நடித்துகொண்டிருந்த போது ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கே போய் அவரை காரில் அழைத்து சென்று விசாரித்தார்கள். இப்படிப்பட்ட … Read more

பக்கா பிளானோடு சென்னை வரும் அமித்ஷா!. அதிர்ச்சியில் திமுக!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!…

amit shah

பாரதீய ஜனதா கட்சியின் மூளையாக செயல்பட்டு வருபவர் அமித்ஷா. தேர்தல் வரும்போது யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கான காய்களை கச்சிதமாக நகர்த்துபவர் இவர்தான். அதனால்தான் அனைவரும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்கள். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என அமித்ஷா கருதுகிறார். மேலும், எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் … Read more

பழனிச்சாமிக்கு அடிபணிந்த அமித்ஷா!.. அண்ணாமலையை இப்படி டீல்ல விட்டாரே!….

annamalai

சில வருடஙகளுக்கு முன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை. இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து … Read more

செங்கோட்டையனை தொடந்து அமித்ஷாவை சந்தித்த அந்த 2 பேர்!.. டெல்லியில் நடப்பது என்ன?!…

amit shah

எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது, அவருக்கு பின் செங்கோட்டையன் சென்று அமித்ஷாவை சந்தித்தது, மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி என்று அமித்ஷாவிடம் பேசியது என கடந்த சில நாட்களில் தமிழக அரசு சூடு பிடித்திருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதன்பின் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தொடர்ந்து செல்லி வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், திடீர் திருப்பமாக அமித்ஷாவை சந்திக்கப்போனார். மக்கள் பிரச்சனை பற்றி பேசப்போனேன் … Read more