அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு

Vanniyarasu

அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு! அதிமுக மற்றும் பாஜக கூட்டணியானது கடந்த தேர்தல் வரை சுமூகமாக தொடர்ந்து வந்தது.இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் இவ்விரு கூட்டணிகளுக்கிடையே சிறு சிறுகுழப்பங்கள் ஏற்பட துவங்கியது.சமீபத்திய அண்ணா மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சர்ச்சை பேச்சு கட்சியினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுகவின் முக்கிய தலைவர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலையின் அந்த பேச்சுக்கு கடும் விமர்சனம் செய்ததோடு பாஜகவுடன் கூட்டணியில் … Read more

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

திமுகவினர் தாக்கியதில் அதிமுக நிர்வாகி மரணம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!! செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக-வினர் தாக்குதல் நடத்தியதில் அதிமுக நிர்வாகிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக நிர்வாகியின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையை உடனே நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர மன்ற 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2022ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் … Read more

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி : புது வியூகம் வகுக்கும் திமுக!!

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி : புது வியூகம் வகுக்கும் திமுக!! காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை என அடுத்தடுத்த திட்டங்களால் தமிழக மக்கள் மத்தியில் திமுக அரசின் செல்வாக்கு பெருகியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கட்சி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிகப்படியான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. தன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஓரிரு தொகுதிகளை மட்டும் திமுக ஒதுக்க உள்ளதாகும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் … Read more

புதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை !!

புதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக கட்சி தமிழகத்தின் மேலும் பலப்படுத்திக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த பிறகு கட்சி மூன்று, நான்காகப் பிளவுபட்டது. ஓபிஎஸ் ஒரு தரப்பும், தினகரன் ஒரு தரப்பும், எடப்பாடியார் ஒரு … Read more

ஆவின் நிறுவனத்தை பாழாக்கும் திமுக அரசு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

ஆவின் நிறுவனத்தை பாழாக்கும் திமுக அரசு : எடப்பாடி பழனிசாமி கண்டனம் திமுக அரசு ஆவின் நிறுவனத்தை பாழாக்கி விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஆவின் பால் மற்றும் ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கொள்முதல் விலையை உயர்த்தாதது குறித்தும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். திமுக அரசு பதவியேற்ற 28 மாத காலத்திற்குள் பால் மற்றும் பால் பொருட்களின் விலைகளை 8 முறை … Read more

சனாதனம் குறித்து பேசாதீர்கள் : அதற்கு இதுதான் காரணமா?

சனாதனம் குறித்து பேசாதீர்கள் : அதற்கு இதுதான் காரணமா? திமுகவில் உள்ளவர்கள் யாரும் சனாதனம் குறித்து எந்தவித கருத்தையும் பொது இடங்களில் தெரிவிக்க வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உரிய காரணம் தற்போது வெளியாகி உள்ளது இ.ந்.தி.யா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுக கட்சி சனாதன ஒழிப்பு குறித்து ஏதும் பேசினால் கூட்டணியில் உள்ள மத்த கட்சி மீது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் அவர்கள் முக.ஸ்டாலின் அவர்கள் இந்த … Read more

சனாதனம் குறித்து இனி யாரும் பேசக்கூடாது ஸ்டாலின் போட்ட புது உத்தரவு!!

சனாதனம் குறித்து இனி யாரும் பேசக்கூடாது ஸ்டாலின் போட்ட புது உத்தரவு!! திமுக கட்சியில் உள்ள அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் யாரும் சனாதனம் குறித்து பேசக்கூடாது என அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கலந்து … Read more

பராசக்தி பட்டம் இல்லை என்றால் என் வெற்றி படங்கள் இல்லை : பிரபல இயக்குனர் ஓபன் டாக்!!

பராசக்தி பட்டம் இல்லை என்றால் என் வெற்றி படங்கள் இல்லை : பிரபல இயக்குனர் ஓபன் டாக்!! 1952 ஆம் ஆண்டு வெளியான படம் தான் பராசக்தி. மாபெரும் புரட்சி படமாகவும், வெற்றி படமாகவும் அமைந்தது. இப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினார். பி. ஏ. பெருமாள் தயாரித்தார். திரைக்கதை- வசனம் சொல்லவே தேவையில்லை கலைஞர் தான். நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இப்படத்தில் நடித்த இருப்பினும் பராசக்தி படத்தின் நாயகன் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான். … Read more

தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன?

தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன? திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது. சில திமுக நிர்வாகிகள் மக்களுக்கு இடையூறாக தொந்தரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக அமைச்சரும், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது சனாதனம் குறித்து பேசியநு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் … Read more

அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு – எடப்பாடியார் அறிவிப்பு!!

அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு – எடப்பாடியார் அறிவிப்பு அஇஅதிமுக கட்சியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் படிவங்களை தலைமையிடத்தில் ஒப்படைப்பதற்கான காலங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது ஏன் என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி முதல் அதிமுக உறுப்பினர்கள் படிவங்கள் விநியோகிக்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மே 5ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிமுக … Read more