ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக தவிர்க்கப்பட்ட 5 ஆவது டெஸ்ட் ?

ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக தவிர்க்கப்பட்ட 5 ஆவது டெஸ்ட் ?

செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிக்காக இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 ஆவது போட்டி ரத்து செய்யப்பட்டதாக புது தகவல்கள் வரதொடங்கியுள்ளன. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவந்தது, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்று இந்திய அணி முன்னிலை வகித்திருந்த நிலையில் 5 ஆவது டெஸ்ட் போட்டி ஒல்ட் ட்ராபோர்டு மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில் இந்திய அணியில் பயிற்சியாளர் உள்ளிட்ட சிலருக்கு கொரோனா … Read more

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வின்!

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வின்!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான அஷ்வின் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். எந்த காரணத்துக்காக அணியிலிருந்து அஸ்வின் ஓரங்கட்டப்படுகிறார் என்பது இதுவரை யாருமே அறியாத புதிராக உள்ளது. ஏனெனில் 46 டி20 போட்டிகளில் அவர் 52 விக்கெட்டுகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் எகோனமியை 7க்கும் குறைவாக வைத்திருந்தார். 7க்கும் குறைவாக எகோனமியை ஒரு சில இந்திய … Read more

டி20 உலக கோப்பை : மீண்டும் தோனி !

டி20 உலக கோப்பை : மீண்டும் தோனி !

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றுள்ளார். ஓய்வு பெற்ற இந்திய முன்னாள் கேப்டன் தோனி அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாகர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, … Read more

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்: தலைமை தாங்கும் ஆனந்த்!

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்: தலைமை தாங்கும் ஆனந்த்!

5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கிறது. கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆன்லைன் மூலம் நடந்தது. இதில் இந்தியா, ரஷியா அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த ஆண்டுக்கான உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த போட்டி இன்று முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த … Read more

மஹராஷ்டிராவில் கொரோனா 3-ஆவது அலை -அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மஹராஷ்டிராவில் கொரோனா 3-ஆவது அலை -அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாட்டிலேயே மராட்டிய மாநிலம் மும்பையில் கொரோனா 3-வது அலை வந்து விட்டதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மும்பை மேயர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் கொரோனா தினசரி பாதிப்பு சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரமாக உள்ளது. 60 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு, இந்த அளவுக்கு குறைந்ததால், கொரோனா கட்டுக்குள் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு சதவீதம் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக … Read more

டி20 தரவரிசை : தொடர்ந்து முதலிடத்தில் ஷஃபாலி வர்மா!

டி20 தரவரிசை : தொடர்ந்து முதலிடத்தில் ஷஃபாலி வர்மா!

டி20 தரவரிசையில் இந்தியாவின் ஷஃபாலி வர்மா தொடர்ச்சியாக முதலிட வகித்து வருகிறார். மகளிர் டி20 தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுக்காக களமிறங்கிய இளைய வீராங்கனையான 17 வயதேயான ஷஃபாலி கடந்த வருடம் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தார். அதிலிருந்து தொடர்ந்து இன்று வரை தொடர்ச்சியாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இதுவரை 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷஃபாலி … Read more

துண்டிக்கப்பட்ட சிக்கிம் மாநிலம் நிலச்சரிவால் பாதிப்பு!

துண்டிக்கப்பட்ட சிக்கிம் மாநிலம் நிலச்சரிவால் பாதிப்பு!

சிக்கிம் மாநிலத்தில் பலத்த மழையினால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவின் காரணமாக அம்மாநிலம் நாட்டிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 10 நாட்டின் பிற பகுதிகளுடன் சிக்கிம் மாநிலத்தை இணைகிறது. அந்த மாநில எல்லையான ரங்கோ பூமியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்தமுறை பெய்த மழை காலங்களில் மட்டும் சுமார் நான்கு முறை நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி அப்பகுதியில் பெய்த … Read more

கபில் தேவின் சாதனையை பின்னுக்கு தள்ளிய பும்ப்ரா!

கபில் தேவின் சாதனையை பின்னுக்கு தள்ளிய பும்ப்ரா!

டெஸ்ட் போட்டியில் வேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்து கபில்தேவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருந்தது. இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் விக்கெட்டை பும்ரா எடுத்தார். இது அவரது 100-வது விக்கெட் ஆகும். மேலும், 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வேக பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை … Read more

இந்தியா : மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! மூன்றாவது அலையின் தொடக்கமா?

இந்தியா : மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! மூன்றாவது அலையின் தொடக்கமா?

தொடர்ந்து குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இந்தியாவில் மீண்டும் அதிகரித்துள்ளதால் மூன்றாம் அலை பாதிப்பு குறித்து முன்கள பணியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47 ஆயிரத்து 092 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா … Read more

உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சல்: 39 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் மர்ம காய்ச்சல்: 39 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட மர்ம காய்ச்சலுக்கு முப்பத்தி இரண்டு குழந்தைகள் உட்பட முப்பத்தி ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் கொரோனா ருத்ர தாண்டவம் இன்னும் முழுமையாக முடிவதற்கு முன்னரே உத்தர பிரதேச மாநிலத்தின் பிரோசாபாத் நகரத்தில் மர்மக் காய்ச்சல் பரவியுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காய்ச்சல் குறித்து விசாரணை செய்ய கிங் ஜார்ஜ் மருத்துவமனையின் மருத்துவ குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த காய்ச்சல் மணிப்புரி மற்றும் மதுரா … Read more