குடியுரிமை வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவை குறித்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட 144 மனுக்கள் மீது இன்று தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்றது. அப்போது குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக்கொண்டதற்கு நீதிபதிகள் மறுத்து விட்டனர். மத்திய அரசின் வாதத்தை கேட்காமல் ஒருதலைப்பட்சமாக தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். … Read more