தற்கொலை செய்து கொண்ட மாணவன் விக்னேஷின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி! முதல்வர் உத்தரவு!
அரியலூர் மாவட்டத்தில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், மருதூர் மதுரா இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் விக்னேஷ் என்பவர் மன உளைச்சல் காரணமாக கிணற்றில் குதித்து நேற்று தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன். … Read more