நடிகர் விஜய் அரசியலில் ஜொலிக்க வாய்ப்பிருக்கா? ரஜினியின் உடன்பிறப்பு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் விஜய். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்னும் தன்னுடைய கடைசி படத்தில் நடித்து முடித்துவிட்டார். இனி தீவிர அரசியலில் விஜய் இறங்கப்போவதாக அறிவித்து தவெக என்னும் கட்சியை ஆரம்பித்து அரசியல் களத்திற்குள் புகுந்துவிட்டார். நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன். இவர் ஆன்மீகத்தில் ரஜினிகாந்தை போலவே அதிக நாட்டம் கொண்டவர். பாஜக கட்சியின் விசுவாசியும் கூட. இவரை வைத்து எப்படியாவது ரஜினியை அரசியலில் இறக்கி பாஜகவிற்கு ஆதரவான சூழலை … Read more

விஜய்க்கு பின்னால் இருப்பது யார் என்று எனக்கு தெரியும்! சபாநாயகர் பேச்சால் அதிர்ந்த அரசியல் களம்!

Appavu DMK

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து திமுக மற்றும் பாஜக கட்சிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். அண்மையில் கூட சிவகங்கை திருபுவனம் அஜித்குமார் லாக் அப் மரணத்தை எதிர்த்து ஆளும் திமுக கட்சியை எதிர்த்து சென்னையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார் விஜய். இந்த கண்டன ஆர்பாட்டம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய்யின் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி திமுக கட்சியை சேர்ந்த சபாநாயகர் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி … Read more

பத்ம பூஷன் விருது வாங்கிய அஜித்!. விஜய், பவன் கல்யாண் வாழ்த்து!…

ajith

சினிமா நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் பத்மஸ்ரீ விருது கொடுப்பார்கள். பல வருடங்கள் சினிமாவில் இருந்து மக்களை மகிழ்விக்கும் சில கலைஞர்களுக்கு மட்டுமே பத்மபூஷன், பாரத ரத்னா போன்ற விருதுகளை கொடுப்பார்கள். நடிகர் அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. விஜயை போலவே அஜித்துக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படமும் சூப்பர் ஹிட் அடித்து 250 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம், சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கலக்கி … Read more

தவெக கூட்டணி கதவை மூடிவிட்டேன்!. திருமாவளவன் பரபரப்பு பேச்சு!…

thiruma

TVK Vijay: திமுகவை தோற்கடிப்பதற்காகவே அரசியல் கட்சி துவங்கியது போலவே இருக்கிறது விஜயின் செயல்பாடு. ஏனெனில், கட்சி துவங்கியது முதலே அவர் திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல் கட்சி மாநாட்டிலும் சரி, கட்சி துவங்கி ஒரு வருடம் முடிந்த விழாவிலும் சரி, கட்சி பொதுக்கூட்டத்திலும் சரி அவர் முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசி வருகிறார். அதிமுக பற்றி அவர் எங்கும் பேசவில்லை. மன்னராட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்.. ஊழல் அரசியலை … Read more

போறதுண்ணா போங்க.. ஆனா என் தம்பி விஜய் உங்களை சேர்த்துக்க மாட்டார்!.. சீமான் ஃபீலிங்!…

seeman

நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார் சீமான். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான். ஒருபக்கம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறி விஜயின் கட்சிக்கு போய்விட்டார்கள். … Read more

அது வேற வாய்.. இது நார வாய்!. விஜய்க்கு சப்போர்ட் பண்ணும் சீமானை கிழிக்கும் ரசிகர்கள்.

tvk vijay

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ரமலான் நோன்பு கொடுக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டார். அதில் இஸ்லாம் இயக்கத்தை சேர்ந்த சிலரும் கலந்துகொண்டனர். அந்த விழாவில் நிறைய குளறுபடிகள் நடந்தது. டோக்கன் வைத்திருந்த பலரையும் உள்ளேவிடவில்லை. அதேநேரம், மது அருந்திவிட்டு சில விஜய் ரசிகர்கள் உள்ளே புகுந்தனர் என புகார்கள் எழுந்தது. இந்நிலையில்தான், விஜய் ஒரு முஸ்லீம் விரோதி என அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் ஷஹாபுதீன் … Read more

நீங்க கேள்வி கேட்க வேண்டியது பாஜகவை.. திமுகவை அல்ல.. விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு!..

vijay

ஆளும் கட்சியை விமர்சனம் செய்தால்தான் மக்களின் கவனத்தை பெற்று அரசியலில் வெற்றி பெற முடியும் என்பது சரிதான் என்றாலும் எல்லாவற்றுக்கு ஆளும் கட்சியை மட்டுமே குறை சொல்லி கொண்டிருக்கக் கூடாது. மத்திய அரசு தொடர்பான விஷயங்களில் அதையும் விமர்சிக்க வேண்டும். ஆனால் விஜயோ திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அவர் வெளியிடும் எல்லா அறிக்கைகளும் திமுகவுக்கு எதிராக மட்டுமே இருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் … Read more

தமிழக அரசியலில் பரபரப்பு!.. பாஜக கூட்டணியில் இணைகிறாரா சீமான்?!. பரபர அப்டேட்!..

seeman

Seeman: தன்னை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தம்பி என அழைத்துக்கொண்டு நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கியவர் சீமான். அடிப்படையில் சினிமா கதாசிரியர், இயக்குனர் என்பதால் நன்றாகவே கதை சொல்வார். இவர் சொல்லும் பல கற்பனை கதைகளை நிஜமென நம்பிய இளைஞர்கள் இவரின் தம்பிகளாக மாறிவிட்டனர். அரசியல் மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி கவனம் ஈர்ப்பார். சீமான் பேசுவதை கேட்டால் தம்பிகளுக்கு நரம்புகள் புடைக்கும். ‘ஒருநாள் இந்த நிலம் என்கிட்ட சிக்குச்சி’ என … Read more

திரைக்கு இயக்குனர் போல அரசியலில் விஜய்க்கு பக்கபலமாக நிற்கும் மும்மூர்த்திகள்

திரைக்கு இயக்குனர் போல அரசியலில் விஜய்க்கு பக்கபலமாக நிற்கும் மும்மூர்த்திகள் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் எழுதத் தொடங்கியுள்ளார் நடிகர் விஜய். அவரது தலைமையில் உருவாகியுள்ள தமிழக வெற்றி கழகம், கடந்த சில வாரங்களில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. திரையுலகத்தில் மக்கள் மனதில் ஆழ்ந்த இடம் பிடித்த விஜய், இப்போது அரசியல் மேடையிலும் வெற்றியை நோக்கி திட்டமிட்ட பயணத்தில் உள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் எந்த கூட்டணியாக இருந்தாலும் விஜய்யின் அரசியல் நகர்வை பொறுத்தே … Read more

தாவெக சார்பில் போராட்டம்!. ஆனால், விஜய் வீட்டில் ஓய்வு!.. இது சரியா வருமா?….

vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு சினிமா படப்பிடிப்பில் இடைவெளி கிடைக்கும்போது மக்களிடம் அரசியல் பேசி வருகிறார். கோட் படத்தில் நடிக்கும்போதே அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அதன்பின் அந்த படத்தை முடித்துவிட்டு ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதுதான் அவரின் கடைசிப்படம் எனவும் சொல்லப்பட்டது. இந்த படத்தை முடித்தபின் விஜய் அரசியலுக்கு வருவார் என்றும் பேசினார்கள். இடையில் விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் … Read more