விருதுநகரில் பட்டா விவசாய நிலத்தில் போடப்பட்ட சாலையை அகற்றக் கோரி வழக்கு!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த ரமேஷ், காரளம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், ” விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அரசகுளம் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் எவ்விதமான அறிவுறுத்தலும் இன்றி, சாலை அமைத்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. இதனால் நாங்கள் மிகுந்த இழப்பிற்கு … Read more

விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்து மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்து மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை! வனப்பகுதியில் விவசாய நிலங்களுக்கான மின்வேலிக்காக மின்சார திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின்சார வேலியில் சிக்கி, யானைகள் பலியாவதை தடுப்பது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகளும், மின்துறை அதிகாரிகளும் சோதனை நடத்த பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் … Read more

விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கைக்குண்டுகளை டெல்லி போலீசார் கண்டுபுடிப்பு!

வடக்கு டெல்லியில் உள்ள மெட்ரோ விஹாரில் உள்ள விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கைக்குண்டுகளை டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வெடிகுண்டுகள் மத்திய பிரதேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் அவருடைய கூட்டாளி இன்னொருவர் மத்திய பிரதேசத்தில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது . போலீசார் அங்கே சென்று மற்றொரு நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.