சாயமலைக்கா?கலிங்கப்பட்டிக்கா?. சுகாதாரத்துறை அமைச்சர் சந்திப்பு ரத்து.
திருநெல்வேலியில் புதியதாக மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையை அமைப்பதில் திமுக எம்எல்ஏவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே வெளியே தெரியாமல் மோதல் நடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி குருவிகுளம் ஒன்றியம் சாயமலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றக் கோரி அத்தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராஜா சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. … Read more