குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியை திறக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

மாணவர்களின் சேர்க்கையை காரணமாக வைத்து குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் செயல்பட்டு வந்த தமிழ் வழியிலான பள்ளியை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இது குறித்த முழுமையான செய்தியை படிக்க: மோடியின் தொகுதியிலிருந்த ஒரே தமிழ் பள்ளியும் மூட உத்தரவு! இது தான் தமிழுக்கு அளிக்கும் முக்கியத்துவமா? இந்நிலையில் மாணவர் சேர்க்கையை காரணமாக வைத்து குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியை திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் … Read more

நாடே விமர்சித்து வரும் விவசாய மசோதா குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss

நாடு முழுவதும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் விவசாய மசோதா குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல்,லாபத்துடன் கூடிய விலையை அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்! என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட உழவர்களின் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் வசதிகள்) மசோதா, உழவர்களுக்கான (அதிகாரமளித்தல் … Read more

விதிகளை மதிக்காமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மத்திய அமைச்சகம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

விதிகளை மதிக்காமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மத்திய அமைச்சகம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம் காவிரி டெல்டாவில் 8 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. காவிரி பாசன மாவட்டங்களில் 8 இடங்களில் எண்ணெய் கிணறுகளை அமைப்பதற்காக அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி காலாவதியாகவுள்ள நிலையில், அந்த அனுமதியை 2023-ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய சுற்றுச்சூழல் … Read more

தொடரும் தற்கொலை! நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

தொடரும் தற்கொலை! நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதால் இதற்கு காரணமாக அமைந்த நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த எலந்தங்குழியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை … Read more

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வந்து விடக் கூடாது என்பதற்காக இப்படி செய்வதா? மருத்துவர் ராமதாஸ் குற்றசாட்டு

Dr Ramadoss

இந்தியா முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் சமூக நீதி மறுக்கபடுவது வேதனையளிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் பேராசிரியர் பணிகளில் மறுக்கப்படும் சமூகநீதி: மத்திய பல்கலை.களில் இடஒதுக்கீட்டு தணிக்கை வேண்டும் என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியா முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட 313 பேராசிரியர் பணியிடங்களில் 9 பணியிடங்கள் மட்டுமே அப்பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. மத்திய பல்கலைக்கழகங்களில் பணி நியமனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட … Read more

இதைவிட மோசமாக யாரும் துரோகம் செய்ய முடியாது! மத்திய அரசு மீது ராமதாஸ் குற்றசாட்டு

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

மத்திய அரசின் சார்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்றும்,மத்திய அரசு, பொதுத்துறை நிறுவன பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியமானதான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நிலையிலான பணி நியமனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான … Read more

அதிகார மமதையில் மத்திய அரசு செய்த காரியம்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

இந்தியை திணிக்க மத்திய அரசு தமிழக மருத்துவர்களை அவமதித்த செயலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.இது குறித்து இன்று அவர் “ஆயுஷ் பயிற்சி: இந்தியை திணித்து தமிழக மருத்துவர்களை அவமதிப்பதா?” தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அதைத் தட்டிக் கேட்ட தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய … Read more

கொடுத்த வாக்குறுதியை மீறி மக்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss

காவிரி டெல்டாவில் எரிவாயு குழாய்ப்பாதை அமைக்கும் பணிகளை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. காவிரி பாசனப்பகுதியில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் உழவர்களின் எதிர்ப்பையும் மீறி மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. உழவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் விவசாயத்தை அழிக்கும் நோக்குடன் கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்ப்பாதை … Read more

மாணவர்கள் உயிருடன் விளையாடாதீர்! பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr.Ramadoss

மாணவர்கள் உயிருடன் விளையாடாதீர்! பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? என தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் எப்போது கட்டுக்குள் வரும் என்பதை கணிக்க முடியாது என்பதால், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; இந்த ஆண்டு இறுதி வரை வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை … Read more

கடைசி தடைக்கல்லையும் தகர்த்து எறிந்த உச்சநீதிமன்றம்! வரவேற்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கி உச்சநீதிமன்ற அளித்த விளக்கம் தெளிவானது மற்றும் வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியாவில் 2005-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்துகளில் சம அளவு பங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களின் சொத்துரிமை தொடர்பான கடைசி தடைக்கல்லையும் தகர்த்து எறிந்துள்ள உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும். இந்தியாவில் நீண்ட காலமாக மகளிருக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு … Read more