அவர்களால் வாக்கை மட்டுமே கொடுக்க முடியும் நிறைவேற்ற இயலாது! மத்திய இணை அமைச்சர் விமர்சனம்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருந்த நான்கு மாவட்ட தலைவர்களுக்கு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கார் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட மத்திய இணையமைச்சர் முருகன் மாவட்ட தலைவர்களுக்கு காரை பரிசாக வழங்கினார். இதனையடுத்து அவர் உரையாற்றும்போது திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று வாக்குறுதிகளை மட்டும் கொடுக்கும் ஆனால் அதனை நிறைவேற்ற அந்தக் கட்சியால் இயலாது. குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் … Read more

உள்ளாட்சித் தேர்தல்! ஆலோசனையில் ஈடுபடும் முக்கிய கட்சி!

தமிழ்நாட்டில் சென்ற 2016 ஆம் வருடம் நடக்க வேண்டி இருந்த உள்ளாட்சித் தேர்தல் பல காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சென்ற 2019 ஆம் வருடம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. தொடர்ந்து மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அதனை தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் மற்றும் ஊரக அளவில் தேர்தல் நடைபெற்றது. இதன் … Read more

தமிழக அரசுக்கு எல்.முருகன் வைத்த முக்கிய கோரிக்கை!

தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலமாக கொடுக்கும் பணத்தை நியாயவிலைக் கடைகளின் மூலமாக கொடுக்காமல் வங்கிக் கணக்குகள் மூலமாக அதனை பொது மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் கேட்டுக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் சென்னையில் பத்திரிக்கையாளர்களும் உரையாற்றிய அவர் தமிழக அரசு நோய்த்தொற்று நிவாரண நிதியாக கொடுக்கும் ரூபாய் 4 ஆயிரத்தை நியாயவிலைக் கடைகளின் மூலமாக நேரடியாக வழங்கப்படுகிறது. அங்கே பொதுமக்கள் ஒன்று கூடுவதால் நெருக்கடி உண்டாகிறது. இதனை … Read more

தமிழக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்த பாஜகவின் எல்.முருகன்!

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து இரண்டாவது முறையாக பதவியேற்ற இரண்டு வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் சேவை தினமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த விதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் சென்னை அமைந்தகரையில் நிவாரண பொருட்களை வழங்கி இருக்கிறார். அதன்பிறகு பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய முருகன் சென்னையில் தற்சமயம் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் மற்ற மாவட்டங்களில் இந்த நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த … Read more

முதல்வரின் வார்த்தையை வைத்தே மடக்கிய எல்.முருகன்! செய்வாரா முதலமைச்சர்?

MK Stalin

சென்ற ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி அன்று திமுக உள்பட 11 கூட்டணி கட்சியினர் நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்ற பணியாளர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அதிமுக அரசு முன்களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்ற … Read more

சட்டசபை கட்சித்தலைவர் பதவி! சீனியர்களை ஓரம் கட்டிய எல்.முருகன்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு சுமார் நான்கு சட்டசபை உறுப்பினர்கள் கிடைத்திருக்கிறார்கள். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழக சட்டசபையில் இடம் கிடைத்திருக்கிறது என்று பெருமையுடன் தெரிவித்திருக்கிறார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன்.இவ்வாறான சூழ்நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபை கட்சியின் தலைவராக திருநெல்வேலி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மே மாதம் ஒன்பதாம் தேதி … Read more

வெளியானது தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கை! திமுகப் பெரும் அதிர்ச்சி!

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும் அதோடு தேர்தல் அறிக்கை வெளியிடுவது மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்வது என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு தற்சமயம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் அதிமுக திமுக போன்ற தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தங்களுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு அரசியல் கட்சிகள் சார்பாக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வாரி இறைக்கபடுகின்றன. … Read more

முக்கிய நபரின் வேட்புமனு நிறுத்திவைப்பு! அப்செட்டில் எல். முருகன்!

தமிழக சட்டசபை தேர்தல்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருப்பதால் கடந்த 12ஆம் தேதி அதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில், நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.சட்டசபை தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் இன்று காலை முதலே தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறார்கள். இதில் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் மாநில தலைவர் … Read more

தொகுதி பங்கீடு பாஜக தலைவர்கள் கொடுத்த பேட்டி

சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பாஜக தேர்தல் பார்வையாளர் கிஷன் ரெட்டி, சிடி ரவி, சுதாகர் ரெட்டி, ஆகியோர் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்த கட்சி போட்டியிடும் தொகுதிகள் எந்தெந்த தொகுதி என இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், இருப்பதன் காரணமாக, அந்த கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆலோசனைக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த … Read more

வதந்திகளை நம்பாதீங்க! பாஜக தலைமை அதிரடி!

எதிர்க்கட்சியான திமுக கூட்டணி பேச்சுவார்த்தை அதிமுகவை விட தாமதமாக தான் ஆரம்பமானது. ஆனாலும் அந்த கட்சியில் தற்போது வரையில் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது சுமூகமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் சுமார் ஆறு மாதத்திற்கு முன்னரே தேர்தல் வேலைகளை தொடங்கிய அதிமுகவில் இன்றுவரையில் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது இழுபறியாகவே இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தேமுதிக, பாஜக, என்று முக்கிய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் பிரச்சனைகள் மேலோங்கிய நிலைதான் இன்று வரையில் இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சசிகலாவை … Read more