எதிர்க்கட்சிகள் கடும் அமளி! நாடாளுமன்றம் பிற்பகல் வரையில் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற கூட்டமாக இருந்தாலும் சரி, சட்டமன்ற கூட்டமாக இருந்தாலும் சரி, அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று நினைப்பது ஆளுங்கட்சியை சார்ந்தவர்களின் வழக்கம். ஆனால் இதற்கு நேர் எதிர்மறையாக அது நாடாளுமன்றமோ அல்லது சட்டமன்றமோ எதுவாகயிருந்தாலும் கூட கூட்டம் என்று வந்துவிட்டால் அதனை சரியான முறையில் நடத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலைக்கு ஆளும்கட்சியினர் தள்ளப்படுவார்கள். இது எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது. கொண்டு வரப்படுவது நல்ல திட்டமோ அல்லது தீமை விளைவிக்கும் திட்டமோ எதுவாகயிருந்தாலும், ஆளும் கட்சி … Read more

இன்றுடன் நிறைவு பெறுகிறதா நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சென்ற நவம்பர் மாதம் 29ம் தேதி ஆரம்பமானது, ஆனால் குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பித்ததிலிருந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு காரணங்களை தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. அத்துடன் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக தெரிவித்து 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக, நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தது. இதனைத் … Read more

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர்! முதல் நாளிலேயே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பமானது. இந்த கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், மக்களவை ஆரம்பித்தவுடன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட தொடங்கினார்கள். அதோடு எதிர்கட்சியினர் தொடர் முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, மக்களவையில் இன்று பகல் 12 மணி வரை ஒத்தி வைத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

எதிர்க்கட்சியினரின் அமளிக்கிடையே இடையே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை ஆரம்பமானது இதனை முன்னிட்டு அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வந்தார். நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த கூட்டத்தொடரில் பொதுமக்கள் ஆக்கப்பூர்வமான விவாதத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் எல்லா பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் நாடாளுமன்றத்தை அவமரியாதை செய்த விதத்தில் அமைதியாக விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று கூறினார். எதிர்கட்சிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய … Read more

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 29ஆம் தேதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. ஒட்டு மொத்தமாக 19 அமர்வுகள் நடைபெறும் 36 மசோதாக்கள், ஒரு நிதித்துறை குறித்த அலுவல் உள்ளிட்டவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். நாடாளுமன்ற விதி … Read more

முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர்! போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சிகள்!

கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமானது அன்று ஆரம்பித்த குளிர்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரையில் ஒட்டு மொத்தமாக 19 தினங்கள் நடைபெற இருந்த நிலையில், நேற்றைய தினம் நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.பேகசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக, மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் உரையாற்றிய மாநிலங்களவை … Read more

பெகாசஸ் விவகாரத்திற்கு இந்த விதத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுக!

DMK protested against the Pegasus affair in this way!

பெகாசஸ் விவகாரத்திற்கு இந்த விதத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுக! நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும் காலம். ஆனால் இந்த கூட்டத் தொடர் முழுவதும் எதிர்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதிலும், மதியம், மாலை என ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. எதிர்கட்சிகள் அந்த விசயத்தில் எதற்கு மத்திய அரசு மௌனம் காக்கின்றது. எங்களுக்கு வெளிப்படையான உண்மை தெரிய வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டன. ஆனால் மோடி அரசோ அதற்கு மௌனம் சாதித்த நிலையில், நேற்று தான் நாங்கள் … Read more

அமளியின் நடுவே நிறைவேற்றப்பட்ட இரு முக்கிய மசோதாக்கள்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் இரண்டு அவைகளையும் எதிர்க்கட்சிகள் நடத்த விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதிலும் பெகாசஸ் செயலின் மூலமாக இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 300 நபர்களுக்கு மேல் இருப்பவர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு அவர்களின் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இதனால் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளும் எதிர்க்கட்சியினர் … Read more