அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட புதிய இலக்கு!

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட புதிய இலக்கு!

தமிழகத்தில் இருக்கின்ற 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 14 வது ஊதிய பேச்சு வார்த்தையினடிப்படையிலும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும், மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கான தேவை மாதத்திற்கு 10 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. பேருந்துகளில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலமாக 3,40,00000லட்சம் ரூபாய் … Read more

முக்கிய திட்டத்திற்கு ஊக்க தொகையை நிறுத்திய தமிழக அரசு!

முக்கிய திட்டத்திற்கு ஊக்க தொகையை நிறுத்திய தமிழக அரசு!

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தன்னார்வலர்களுக்கு மே மாதம் முதல் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நோய் தொற்று பரவல் காரணமாக, 2 வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் இணையதளத்தின் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டனர். இதனால் பல குழந்தைகளுக்கு கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. அந்த குறைபாட்டை நீக்கும் வகையில், கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இல்லம் தேடி கல்வியை திட்டத்தை அரசு அறிமுகம் செய்து வைத்தது. இந்தத் திட்டத்தின் மூலமாக 1 முதல் 8ம் வகுப்பு … Read more

தன்னிச்சையாக விடுமுறை அறிவித்த விவகாரம் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தன்னிச்சையாக விடுமுறை அறிவித்த விவகாரம் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை இல்லை! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் இருக்கின்ற தனியார் பள்ளியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவு,ம் அதுவரையில் பள்ளிகள் இயங்காது எனவும், கடந்த 17ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு கல்வித் துறை சட்ட விதிகளை மீறி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை செய்தது. அந்த எச்சரிக்கையும் உயர்ந்ததாக … Read more

செலவுகளில் தாராளம் காட்டும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள்!

செலவுகளில் தாராளம் காட்டும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள்!

தமிழகத்திலிருக்கின்ற ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு இதுவரையில் 1000 ரூபாய் செலவு செய்ய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு 5000 ரூபாய் வரையில் செலவு செய்து கொள்ளலாம் என்று ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. கிராம சபை சிறப்பு கிராம சபை நடைபெறும் தினங்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சி பொது நிதியிலிருந்து இந்த செலவுகளை செய்யலாம் என்று ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு அதிகாரம் … Read more

இவர்களுக்கு மட்டும் தான் மாத உரிமைத் தொகை! வெளியானது அதிரடி அறிவிப்பு!

இவர்களுக்கு மட்டும் தான் மாத உரிமைத் தொகை! வெளியானது அதிரடி அறிவிப்பு!

]தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகையை வழங்குவதற்கு 34 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் போது தமிழக அரசு குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு, நோய் தொற்று நிவாரணம், உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை வழங்குகிறது என கூறி இருக்கிறார். இதில் அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், போன்ற 40 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயனடைந்து வருகிறார்கள். ஆகவே குடும்பத்தலைவிக்கான மாதம் 1000 … Read more

மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இட ஒதுக்கீடு! குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இட ஒதுக்கீடு! குழு அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அதனடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்யும் விதத்தில் உயர்மட்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கின்ற அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டினடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் விதத்தில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் மற்றும் தலைவராகவும், தொழிலாளர் நலத்துறை மனிதவள மேலாண்மை துறை செயலாளர்கள், … Read more

மகிழ்ச்சி! மாற்றுத்திறனாளிகளுக்கு இனிமையான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு!

மகிழ்ச்சி! மாற்றுத்திறனாளிகளுக்கு இனிமையான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்துவருகிறார்கள். இருந்தாலும் கூட அந்த கோரிக்கையை இதுவரையில் அமைந்த எந்த அரசும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில், சென்ற சட்டசபை தேர்தலின்போது திமுக தரப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனாலும் ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் … Read more

மாணவர்கள் பள்ளிகளுக்கு இனி இவ்வாறு வந்தால் அதிரடி நடவடிக்கை! கடுமையாக எச்சரித்த பள்ளிக்கல்வித்துறை!

மாணவர்கள் பள்ளிகளுக்கு இனி இவ்வாறு வந்தால் அதிரடி நடவடிக்கை! கடுமையாக எச்சரித்த பள்ளிக்கல்வித்துறை!

சமீபகாலமாக தமிழகத்தில் 18 வயதிற்கு கீழே இருப்பவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது வாடிக்கையாகிவிட்டது ஆனால் 18 வயதிற்கு கீழே இருப்பவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்பது விதியாகும். இருந்தாலும் இதனை யாரும் காதில் போட்டுக் கொள்வதில்லை, 12 வயது ஆகிவிட்டாலே இருசக்கர வாகனத்தில் எல்லோரும் பறந்து கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு விவரம் அறியாத வயதில் இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுத்து அதன் காரணமாக விபத்தில் சிக்கி பலர் பலியாகியிருக்கிறார்கள். பலருடைய வாழ்வு சூனியமாக மாறியிருக்கிறது. இதுபோன்ற பல சம்பவங்கள் … Read more

இனிமே கடைகளில் இதை பயன்படுத்தினால் அவ்வளவுதான்! தமிழக அரசு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

இனிமே கடைகளில் இதை பயன்படுத்தினால் அவ்வளவுதான்! தமிழக அரசு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது இந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு பல்வேறு தீமைகள் எழுகின்றன என்று தெரிவித்து கடந்த 2019ஆம் வருடம் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்க்கும் விதமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தொடரும் என்று … Read more

விரைவில் கூட இருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்! முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

விரைவில் கூட இருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்! முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!

இந்த வருடத்துக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக மிக விரைவில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பு முன்னரே வெளியிடப்பட்டிருந்தது. ஆனாலும் சென்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்று பலரும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மிக விரைவில் இந்த வருடத்திற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக சட்டசபை கூடவிருக்கிறது. மத்திய நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரையில் ஏற்கனவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்ற பட்ஜெட் … Read more