காணவில்லை!! காணவில்லை!! கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம்!! போஸ்டரால் பரபரப்பு..!

சாத்தூர் அருகே மேலகாந்திநகர் பகுதியில் உள்ள அனைத்து ரௌடுகளையும் காணவில்லை அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட மேலகாந்திநகர் பகுதியில் பாதாள சாக்டை திட்டத்திற்காக சாலைகள் தோண்டபட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 2 மாத காலமாக நடைபெற்று வந்த இந்த பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அந்த பகுதியில் உள்ள சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் அப்படியே விடப்பட்டுள்ளது. … Read more

விவசாய பெருமக்கள் கோரிக்கை..! முதல்வர் உத்தரவு!

பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாய பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் … Read more

தனியார் மருத்துவமனை அனுமதி ரத்து! மாவட்ட நிர்வாகம் அதிரடி!

விருதுநகர்: கொரோனா சிகிச்சைக்காக ரூ.7.40 லட்சம் கட்டணம் வசூலித்ததாக அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் அனுமதியை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசின் அனுமதி பெற்று சில தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்து வருகின்றன. இந்த வகையில் சிகிச்சை பெறும் பொதுமக்கள் அதிக நிதிச் சுமைக்கு ஆளாகாத வகையில் கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து அவ்வபோது அதிகாரிகள் ஆய்வு செய்தும் வருகின்றனர். … Read more