இந்தியா சுதந்திரத்திற்கு முன்பாக பல குறுநில மன்னர்கள் மற்றும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னர்கள் என பல மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. இதில் வட இந்தியாவை நூறாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தது முகாலய பேரரசு.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மன்னராட்சி ஆனது முழுவதுமாக ஒழிக்கப்பட்டு உயிரோடு இருக்கக்கூடிய மன்னர்களின் வாரிசுகளுக்கு சொத்துக்கள் வழங்கப்பட்டது மற்ற சொத்துக்கள் அரசுடுமையாக மாற்ற ப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த சொத்துக்களில் புராதான மதிப்புமிக்க சொத்துக்கள் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அப்படி கொண்டுவரப்பட்டதில் முக்கியமான ஒன்றுதான் தாஜ்மஹால். இந்த தாஜ்மஹால் ஆனது உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மொகாலயம் அண்ணன் ஷாஜஹான் தன்னுடைய மனைவி நினைவாக கட்டிய வெள்ளை மார்பில் மாளிகையானது மிகவும் நுட்பமாகவும் அழகாகவும் பல்லாயிரக்கணக்கான வேலைபாடுகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தினம் தோறும் உலக அளவில் இருந்து ஆயிரம் கணக்கான சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை கண்டு ரசிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் தான் ஹைதராபாத்தில் வசிக்கக்கூடிய யாகூப் ஹபீபுதீன் டுசி என்பவர் தாஜ்மஹால் தனக்கு சொந்தம் என்றும் தான் மொகாலய மன்னர்களின் வாரிசு என்றும் தெரிவித்திருக்கிறார். அதிலும் இவர் இந்தியாவை ஆண்ட கடைசி முகாலய மன்னரான பகதூர் ஷாபர் என்பவரின் ஆறாவது தலைமுறை என்றும் தன்னுடைய அடையாளம் குறித்த தகவல்களையும் தெரிவித்து இருக்கிறார்.
அதிலும் குறிப்பாக, மொகாலய மன்னரின் வாரிசு என்பதை நிரூபிக்கும் விதமாக தன்னுடைய டி என் ஏ பரிசோதனை சான்றிதழையும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் நீதிமன்றமும் இவருடைய டி.என்.ஏ சான்றிதழை சரி பார்த்து ஏற்றுக் கொண்டிருப்பது இவருக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாத அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கக்கூடிய நிலமானது தனக்கு சொந்தமான நிலம் என்றும் ராமர் கோயில் கட்டுவதற்காக 1.80 கோடி மதிப்புள்ள செங்கலை தான் காணிக்கையாக கொடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். எனினும் ராமர் கோயில் தன்னுடைய நிலத்தில் இருப்பது குறித்து தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.