நியாய விலை கடை ஊழியர்கள் சில முக்கிய நிபந்தனைகளை அதாவது உணவுப்பொருட்களை முழுவதுமாக வழங்குவது, ஊழியர்களின் கல்வித் தகுதி அடிப்படையில் ஊதியம் என குறிப்பிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமாக 34,790 ரேஷன் கடைகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு சர்க்கரை பாமாயில் கோதுமை போன்றவை இரண்டு கோடி பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குடோன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் கொண்டு வருவது வெள்ளிக்கிழமை நாட்களில் கொண்டு வருவதால் தங்களுக்கு விடுமுறை நாட்கள் கூட சரியாக கிடைக்க பெறுவதில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டி இருந்த நிலையில் அதனை அரசு சரி செய்து இருந்த நிலையில், கிடங்குகளில் இருந்து வரக்கூடிய பொருட்கள் அளவு குறைவாக வருவதாகவும் ஆனால் மக்களுக்கு நிறைவான பொருட்களை கொடுக்க வேண்டும் என ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் இது போன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய நியாய விலை கடைகள் செயல்படாது என நியாய விலை கடை சங்கம் தலைமையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த போராட்டத்தினுடைய முக்கிய கோரிக்கையை சரியான அடியில் உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து தர வேண்டும் என்பதுதான். அதோடு கல்வி தகுதிக்கு ஏற்றவாறு சம்பளம் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.