நோட் பண்ணுங்க!! புரதம் நல்லதுதான்.. ஆனால் அதைவிட இது ரொம்ப முக்கியம்!!

Photo of author

By Divya

நோட் பண்ணுங்க!! புரதம் நல்லதுதான்.. ஆனால் அதைவிட இது ரொம்ப முக்கியம்!!

Divya

நமது உடல் செயல்பாட்டிற்கு மிக முக்கியமான ஒன்றாக புரோட்டின் திகழ்கிறது.இது அதிகமாக தேவைப்படும் சத்துக்களில் ஒன்றாக இருக்கிறது.ஆனால் அளவிற்ற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் சில பக்கவிளைவுகள் ஏற்படும்.சிலர் உடல் சோர்வாக இருந்தால் புரோட்டின் உணவுகள்,புரோட்டின் பவுடரை எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் புரோட்டின் மட்டுமே உட்கொண்டால் உடல் பருமனாகிவிடும்.அதிக புரோட்டின் நமது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.அளவிற்கு அதிகமாக புரோட்டின் உணவுகளை சாப்பிட்டால் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வரும்.

நமது உடலுக்கு தேவைப்படும் அளவைவிட அதிகமாக புரதம் சாப்பிட்டால் வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.அதிக புரதம் நிறைந்த உணவுகள் வயிற்று வலி,வயிற்றுப்போக்கு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே வெறும் புரோட்டின் உணவுகளை மட்டும் உட்கொள்ளாமல் இதனுடன் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள்.புரதம் போன்று உடலுக்கு நீர்ச்சத்து,நார்ச்சத்து அவசியமான ஒன்றாக உள்ளது.புரதத்துடன் அதிகளவு காய்கறிகளை சேர்த்து சாப்பிட வேண்டும்.

அதேபோல் உடல் சோர்வு இருந்தால் தண்ணீர் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.தண்ணீர் குடிப்பதன் மூலம் நமது சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்றலாம்.உடல் கழிவுகளை வெளியேற்றினால் மட்டுமே புத்துணர்வுடன் செய்லபட முடியும்.

பெரும்பாலும் வியர்வை மூலமே பாதி கழிவுகள் வெளியேறிவிடுகிறது.இதனால் நாம் சிறுநீர் கழிப்பது குறைவாகிவிடுகிறது.இதனால் நமது சிறுநீரக செயல்பாடு குறைந்துவிடுகிறது.எனவே 20 கிலோ எடை கொண்ட நபர் நாளொன்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.இப்படி தங்கள் உடல் எடையை பொருத்து தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.