நோட் பண்ணிக்கோங்க! நீங்கள் பின்பற்றி வரும் எட்டு ஆபத்தான உணவுமுறை பழக்கங்கள் இது!!

Photo of author

By Divya

நோட் பண்ணிக்கோங்க! நீங்கள் பின்பற்றி வரும் எட்டு ஆபத்தான உணவுமுறை பழக்கங்கள் இது!!

Divya

தற்பொழுது ஆரோக்கியமில்லாத வாழ்க்கைமுறையை பலரும் பின்பற்றி வருகின்றனர்.ஆரோக்கியம் இல்லாத உணவு உடல் ஆரோகியத்தை மோசமாக்கிவிடும்.தவறான உணவுப் பழக்கம் உடலில் கொடிய நோய்களை உருவாக்கி உயிரிழப்பை உண்டாக்கிவிடும்.

நம் ஆரோக்கியம் பாதிக்க காரணம் உணவுதான்.தினசரி வாழ்வில் நாம் ஆரோக்கியமில்லாத பழக்கத்தை மட்டுமே பின்பற்றி வருகின்றோம்.அது என்ன மாதிரியான பழக்கம் என்பதை இங்கு தெரிந்த்து கொள்ளுங்கள்.

1)இன்று பெரும்பலான மக்கள் வேலைப்பளு காரணாமாக காலை உணவை தவிர்க்கின்றனர்.இதனால் உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.காலை உணவு உட்கொள்ளவில்லை என்றால் அல்சர்,வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் உருவாகிவிடும்.

2)குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் பொழுது மொபைல் பார்ப்பதை ஒரு பழக்கமாக மாற்றி வருகின்றனர்.இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு பழக்கமாகும்.

3)வெள்ளை அரிசி சாதத்தை மட்டுமே மூன்று வேளையும் உட்கொள்ளும் பழக்கத்தை பலரும் கடைபிடிக்கின்றனர்.இதனால் உடலுக்கு எந்த ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்காது.தட்டில் காய்கறி கூட்டு,கீரை,புரத உணவுகள் என்று வண்ணமையமான உணவுகள் இருக்க வேண்டும்.

4)சிலர் அதிகமாக உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியம் இல்லாத பழக்கம்.உடல் பருமன்,கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க இது காரணமாகிவிடும்.

5)சீரான உணவுப்பழக்கத்தை கடைபிடிக்கவில்லை என்றால் நிச்சயம் ஆபத்து ஏற்படும்.இளம் வயதில் நோய் பாதிப்புகள் வர இதுவே காரணம்.

6)அவரச அவசரமாக உட்கொள்ளுதல்,உணவை மெல்லாமல் விழுங்குதல் போன்ற காரணங்களால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

7)ஆரோக்கிய உணவுகளை தவிர்த்துவிட்டு ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொண்டால் நிச்சயம் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும்.

8)இன்று பலருக்கு தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறது.தூக்கமின்மை காரணமாக உடல் ஆரோக்கியம் மோசமாகிறது.தற்பொழுது வருகின்ற பாதிப்புகளுக்கு தூக்கமின்மையும் ஒரு காரணமாக இருக்கிறது.