அன்றாடம் காலையில் இதை எடுத்துக்கோங்க!! தலைமுடி வளரும் அதிசயத்தை காண்பீர்கள்!!
கருவேப்பிலை நம் உணவின் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நம் உணவை அழகு மற்றும் வாசனையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நம் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்றாக அமைகிறது.
கருவேப்பிலையை நாம் தினமும் பயன்படுத்தி வருகையில் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் ஆரோக்கியமான முறையில் செயல்படுகிறது.
கருவேப்பிலையை நாம் தினமும் ஐந்து முதல் ஆறு இலைகளை சாப்பிட்டு வருகையில் இளநரை மறைந்து முடி உதிர்வு பிரச்சனை நீங்கி, முடி வளர உதவுகிறது.
கருவேப்பிலையை பயன்படுத்தும் முறைகள்:
கருவேப்பிலை இலையை காலை எழுந்தவுடன் ஆறு முதல் பத்து இலைகளை மென்று சாப்பிட்டு வருகையில் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைக்கவும் மற்றும் தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
கருவேப்பிலை இலையை பச்சையாக சாப்பிட முடியாதவர்கள் நிழலில் இலையை காய வைத்து அதனை அரைத்து பொடி செய்து கொதிக்க வைத்த தண்ணீரில் அரை டீஸ்பூன் கருவேப்பிலை பொடி மற்றும் தேன் சேர்த்து குடித்து வரலாம்.
குழந்தைகளுக்கு கறிவேப்பிலை, முழு கொத்தமல்லி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வெள்ளை எள், வர மிளகாய் இக்கலவையை மிதமான சூட்டில் வறுத்து எடுத்து அரைத்து பொடியாக்கி தினமும் அரை ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் சேர்த்து கலந்து கொடுக்கையில் குழந்தைகளின் முகப்பொலிவும் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
இதனைப் போன்றே அரை லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் வெந்தயம் மற்றும் கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவுக்கு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். மேலும் தேங்காய் எண்ணெயை சூடாக்கி கொண்டு அரைத்த கலவையை போட்டு மிதமான அனலில் சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் ஆரிய உடன் வடிகட்டி அதனை தலையில் தேய்த்து வருகையில் முடி நன்றாக வளரும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.