போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே நடந்து முடிந்துள்ள பேச்சுவார்த்தை!

Photo of author

By Parthipan K

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே நடந்து முடிந்துள்ள பேச்சுவார்த்தை!

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் இன்று 15-வது நாளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரின் காரணமாக உள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் சிக்கி உள்ளனர்.

இரண்டு வாரங்களை கடந்தும் உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் நிறுத்தப்படாமல் நீடித்து வருகிறது. இந்த போரால் உக்ரைன் நாட்டில் இருந்து தினமும் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் வெளியேறி வருகின்றனர். இதுவரை இருபது லட்சத்திற்கும் அதிகமானோர் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

உக்ரைன் மீது ரஷிய படைகள் மிகத் தீவிரமாக நடத்தி வரும் போரை கைவிட பல உலக நாடுகள் வலியுறுத்திய போதிலும் போரை நிறுத்தாமல் ரஷியா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்த உலக நாடுகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையே இதுவரை மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. நடந்து முடிந்த இந்த மூன்று கட்ட அமைதி பேச்சுவார்த்தையிலும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் துருக்கியில் ரஷிய வெளியுறவு மந்திரி மற்றும் உக்ரைன் வெளியுறவு மந்திரி இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இன்று நடைபெற்ற ரஷியா – உக்ரைன் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.