14 மொழிகளில் நடித்த தமிழ் நடிகர்!! சினிமா துறையில் புதிய சாதனை!!

Photo of author

By Gayathri

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஆரம்ப காலகட்டங்களில் இருந்து இன்று வரையில் சில தமிழ் நடிகர்கள் மற்ற மொழி படங்களில் நடிக்க ஒத்துக்கொள்வதில்லை. அதற்கு உதாரணமாக நம்முடைய கேப்டன் விஜயகாந்த் உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது.

ஆனால் ஹாலிவுட் உட்பட 14 மொழி படங்களில் காமெடி நடிகராக மட்டுமே நடித்த ஒரு நடிகரை நம்முடைய தமிழ் சினிமா உருவாக்கியுள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமாக இன்று அளவு பார்க்கப்பட்டு வருகிறது.

தனது ஒல்லியான உடலால் தமிழில் மிகவும் பிரபலமானவர் ஓமக்குச்சி நரசிம்மன் தான் 14 மொழி படங்களில் நடித்த ஒரே காமெடி நடிகர் ஆவார். மேலும் இவர், 1936ம் ஆண்டு பிறந்தார். சூரியன், இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் இவர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி காமெடியன்கள் அனைவருடனும் நடித்த இவர், மக்களை சிரிக்க வைப்பதில் மிகவும் கவனமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் நடித்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை தட்டி சென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் திறமையைக் கண்டு பல மொழிகளில் நடிக்க இவரை அழைத்தனர். அந்தவகையில் ஹாலிவுட்டில் இந்தியன் சம்மர் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் 1993ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

தன் வாழ்நாளிலேயே அதிக படங்களை நடித்த நடிகராக இவர் திகழ்ந்து வருகிறார். 1500 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார் என்பது ரசிகர்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.