Breaking; தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் மரணம்.!! திரையுலகினருக்கு பேரதிர்ச்சி.!!

Photo of author

By Vijay

தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் சார்ந்தவர் பிறைசூடன். தற்போது அவருக்கு வயது 65. திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று 4.15 மணி அளவில் தனது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

இவரது மரணம் தமிழ் திரையுலகினருக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400 பாடல்களை எழுதியுள்ளார்.

1985ஆம் ஆண்டு வெளியான சிறை திரைப்படத்தில் ‘ராசாத்தி ரோசா பூவே’ என்ற பாடல் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு நிறைய ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். சோலப் பசுங்கிளியே, மீனம்மா மீனம்மா, ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல்களையும் எழுதியுள்ளார்.

மேலும், இவர் சில திரைப்படங்களுக்கு வசனங்களையும் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சதுரங்க வேட்டை புகழ் ஆகிய திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்