எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள்!!

0
172
#image_title

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள்

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு திரைக்கு வராமல் ரசிகர்களை ஏமாற்றிய படங்களை பற்றி இங்கு பார்ப்போம்.

முதல் படம் “மத கத ராஜா” . இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி அவர்களின் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியானவுடன் இது இன்னொரு கலகலப்பு என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் பிரச்சனை, பண நெருக்கடி உள்ளிட்ட் காரணங்களால் படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி அவர்கள் இசையமைத்திருந்தார். நடிகர் விஷால் அவர்கள் தன் சொந்த குரலில் பாடிய பாட இடம் பெற்றுள்ள முதல் படமும் “மத கத ராஜா” தான்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் விஜய் அவர்கள் கூட்டணியில் உருவாகிய படம் யோகன் அத்தியாயம் ஒன்று படம் தான். இந்த படத்தின் படப்பிடிப்பு ஓரிரு தினங்கள் மட்டும் தான் நடைபெற்றாலும். இந்த படத்திற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இப்படம் அப்படியே கைவிடப்பட்டது.

அடுத்து பார்க்க போகும் படம் மிக முக்கியமான படம். நடிகர் சிலம்பரசன் அவர்களின் நடிப்பில் உருவாக்கி திரைக்கு வர காத்திருந்த “கெட்டவன்”. இப்படத்தில் இடம்பெற்ற “என் இதயத்தை திருடி சென்றவளே” என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தது

இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்து, இயக்கிய மருதநாயகம் தான். இந்த படம் வெளியானால் உலக சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு தமிழ் சினிமா இருக்கும் என்று பலராலும் பாராட்டப்பட்டது. மருதநாயகம் பொருளாதார நெருக்கடி காரணமாக படம் பாதி நிறைவடைந்தும். அப்படியே நிறுத்தப்பட்டது. எனினும் மருதநாயகம் படத்தை மீண்டும் எடுத்து வெளியிட வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் அவர்களிடம் நிறைய ரசிகர்களும், நிறைய திரை பிரபலங்களுக்கும் கூட கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Previous articleதிரையில் வித்தியாசங்களை நிகழ்த்தும் இயக்குநர் வசந்த்!!
Next articleஇனிமேல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டோம்!!! அமேசான் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!