மத்திய அரசு காட்டிய அதிரடி அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள்!

Photo of author

By Sakthi

நோய் தொற்று நோய் தடுப்பூசி பதிவு செய்வதற்கான கோவின் செயலியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. தடுப்பூசி போடுவதற்கு முன் பதிவு செய்து கொள்வதற்கான கோவின் இணைய தளமானது ஆரம்பிக்கப்பட்டது. இந்த இணையதளத்தில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா போன்ற 10 மாநில மொழிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில், தமிழ் மொழியானது இதில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ். உடனடியாக தமிழிலும் முன்பதிவு செய்யும் வசதியை உண்டாக்கி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதனை தொடர்ந்து தடுப்பூசி முன்பதிவு இணையத்தில் அடுத்த இரண்டு தினங்களில் தமிழ் மொழியிலும் முன்பதிவு செய்வதற்கான வசதி தொடங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருப்பதாக தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தி குறிப்பில் மத்திய அரசின் கோவில் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இருந்தன. இந்த நிலையில், இன்று புதிதாக ஒன்பது மொழிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இப்போதுகூட தமிழ் வழியில் அந்த இணையதளத்தில் பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.இந்த சூழ்நிலையில், இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என சுகாதார துறை அமைச்சரை முதல்வர் வலியுறுத்தி இருக்கின்றார்.

அதன்படி இந்தக் கோரிக்கையை மத்திய அரசு அலுவலர்களிடம் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அந்த சமயத்தில் இந்த இணையதள வசதி படிப்படியாக பல மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் அடுத்த கட்டத்தில் இரண்டு தினங்களுக்குள் தமிழ் மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது என கூறப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலைகளில், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட முறைகளைத் தவிர்த்து மற்ற மாநில மொழிகளும் நீக்கப்பட்டிருந்தது. தற்சமயம் தமிழ் மொழி உள்ளிட்ட மற்ற மாநில மொழிகளும் சேர்க்கப்பட்டு அந்த இணையத்தளமானது புதுப்பிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.