தமிழ் இலக்கியத் திறனாய்வு தேர்வு!!அசத்தி காட்டிய சாகுபுரம் பள்ளி மாணவி!!

0
67

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

 

“பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், ‘தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு’ நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-25-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி திறனறிவுத் தேர்வு அக்டோபர் 19ஆம் தேதி அன்று நடைபெற்றது.

 

இதில் மாநிலம் முழுவதும் 2.25 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனா். இதில் 1500 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களுக்கு பள்ளி கல்வி இயக்கம் சாா்பில் மாதம் ரு.1500 வீதம் இரண்டு ஆண்டுகள் உக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

இந்த தேர்வில் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி கா.ஓவியா அனைத்து வகைப்பள்ளி பிரிவில் 750 பேரில் ஒருவராக தோ்ச்சி பெற்று அரசின் ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றிருக்கிறார்.

 

இந்த மாணவியின் உடைய வெற்றியை பள்ளி டிரஸ்டிகளும் சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் ஜி.ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் பி.ராமச்சந்திரன், பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ், நிா்வாக அலுவலா் வி.மதன், பள்ளி முதல்வா் இ.ஸ்டீபன் பாலாசிா், துணை முதல்வா் என்.சுப்புரத்தினா, தலைமையாசிரியா் எஸ்.ஆழ்வான் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் என அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Previous articleரேவதி உடன் நடிக்க இருந்த வாய்ப்பு.. தன் வாயினால் கெடுத்து கொண்ட மாதம்பட்டி!!மூத்த பத்திரிக்கையாளர் சொல்லிய உண்மை!!
Next articleபம்பை முதல் சன்னிதானம் வரை ரோப் வே திட்டம்!! மத்திய அரசின் அனுமதி!!