திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய ஒரு தலைவருக்கு கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
ரைசிங் பாரத் என்ற மாநாடு டெல்லியில் நடைபெற்ற பொழுது அதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பதாவது :-
வக்பு சட்டம் தங்களுக்கு தீங்கு நினைக்கும் என இஸ்லாமியர்கள் நினைக்கவில்லை என்றும் வேறு சிலரால் அவ்வாறு நினைக்கப்படுவதாகவும் இதற்கு நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தி வாக்களிக்கவில்லை என்றும் அதனோடு கூட ராகுல் காந்தி வக்பு மசோதா குறித்து எதுவும் பேசவே இல்லை என்று மதிய உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இது மட்டுமில்லாது மத்திய அரசு அனைத்து மொழிகளையும் ஒன்றாகத்தான் பார்க்கிறது என்றும் யார் மீதும் ஹிந்தி மொழியை திணிப்பது அல்லது இந்தி மொழியையே முதன்மை மொழியாக அறிவிக்க நினைப்பது போன்ற முடிவுகளை மேற்கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கிறார். திமுகவில் இருக்கக்கூடிய தலைவர்கள் ஒருவருக்கு கூட தமிழில் கையெழுத்து போடத் தெரியாது என்றும் இதனை தான் மீண்டும் மீண்டும் தெரிவித்து கொண்டே இருப்பதாகவும் கட்டாயமாக தமிழகத்தில் நாங்கள் தான் ஜெயிப்போம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை பற்றி பேசினால் தென் மாநில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்றும் அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மட்டும்தான் இவ்வாறெல்லாம் செய்வதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். பிரிவினையை விரும்புபவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்றும் சாமானிய இஸ்லாமியர்கள் பிரிவினையை விரும்பவில்லை ஆனால் வக்பு மசோதா பிரிவினையை உண்டாக்குகிறது என காங்கிரஸ் சார் மட்டுமே தெரிவித்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.