தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு! இந்த குற்றத்திற்காகவா?
அரசியல் பாதைகளில் உயர் பதவி கிடைக்க வேண்டுமென்றால் அதிக அளவில் கட்சியில் ஈடுபாடு காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அடுத்தடுத்து பதவிகள் கிடைக்கும்.ஆனால் தமிழக பாஜக தலைவராக தற்போது உள்ள அண்ணாமலை அவர் கட்சியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே அவருக்கும் தலைவர் பதவி கிடைத்து விட்டது.37 வயதே ஆன அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.9 ஆண்டு காலமாக காவல் துறையில் பணியாற்றினார்.
பின் அரசியலில் ஈடுபடும் எண்ணத்தோடு கடந்த 2019ஆம் ஆண்டு காவல் துறை பதவியிலிருந்து ராஜினாமா செய்துகொண்டார்.2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து மக்களுக்கு தொண்டாற்ற தொடங்கினார்.நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார்.இவர் 68 ஆயிரத்து 550 வாக்குகளை பெற்று தோல்வியுற்றார். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார்.அதனையடுத்து அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்தனர்.
இவருக்கு முன்னதாக ஆரம்பகட்ட காலத்திலிருந்தே பாஜக கட்சியில் இருந்த மூத்த தலைவர்களான வானதி சீனிவாசன்,நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் பாஜக தலைமையும் ஒரு இளம் தலைவரை நியமிக்கலாம் என்று முடிவுசெய்து அண்ணாமலையை நியமித்தனர். தற்பொழுது மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி வருகிறார். அதில் குறிப்பாக கர்நாடக மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து தஞ்சாவூரில் விவசாயிகளுடன் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.மேலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் மக்களாட்சி யாத்திரையிலும் கலந்துகொண்டார்.தற்போது நெல்லையில் அரசு விதிமுறைகளை மீறியதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் அதிக அளவு கூட்டத்தை கூட்டி கொரொனா தொற்று பறவுவதற்கு ஏதுவாக இருந்ததால் இவர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இவருடன் இருந்த தொண்ணூற்று ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.