தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

0
348
#image_title

தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவரவர் கட்சியின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் விவரம், தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு வருகிறார்கள். 10 ஆண்டுகால பாஜக அரசினை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்னும் கூட்டணியினை அமைத்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்த ‘இந்தியா’ கூட்டணி 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் அறிக்கையினை துணை பொதுச்செயலாளரான எம்.பி.கனிமொழி தலைமையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையினை நேற்று தமிழக முதல்வரும், திமுக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று அந்த தேர்தல் அறிக்கையினை அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டுள்ளார்.

அறிக்கை குறித்த விவரங்கள்

உச்சநீதிமன்ற நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்
புதுச்சேரிக்கான மாநில தகுதி வழங்கப்படும்
பொதுசிவில் சட்டம் அமலாகாது
ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் சட்ட பிரிவான 361 நீக்கப்படும்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.65, மற்றும் டீசல் விலை ரூ.75ஆக குறைக்கப்படும்
சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில் டிக்கெட்டுகளின் விலையில் சலுகை அளிக்கப்படும்
அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டு மாநிலங்கள் சுயாட்சி பெற வழிவகுக்கும்
புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்
தேசிய நூலாக திருக்குறள் அறிவிக்கப்படும்
சென்னையில் 3ம் ரயில் முனையம் அமைக்கப்படும்
இந்தியா முழுவதும் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்
ரூ.10 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வட்டி இல்லா கடனாக வழங்கப்படும்

உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளது.

Previous articleவாக்குப்பதிவு நேரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!
Next articleதொடர்ந்து உயரும் தங்கம்! இன்று அதன் விலை நிலவரம்!!