ஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்!

Photo of author

By Parthipan K

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான  உள்ஒதுக்கீடு, வழங்கும் படி அனைத்து தரப்பிலும் கோரிக்கை எழுப்பப் பட்டிருந்தது. அதையடுத்து அனைத்து கட்சி சார்பிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் கவுன்சிலிங் தொடங்க இருக்கிறது. நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடதக்கது.  

ஆனால் ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில் அனைத்து தரப்பிலும் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி #ஆளுநர் அNEETதி என்ற ஹாஷ்டேக் கொண்டு ஆளுநருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பேசபட்டு வருகிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று மாலை சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை நேரில் சந்திக்க உள்ளார். அப்போது இந்த இட ஒதுக்கீடு விவகாரம் பற்றி ஆலோசிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.