குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

Photo of author

By Savitha

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு! 

ஒரு நாள் பயணமாக இன்று காலை 08.30 மணியளவில் டெல்லி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.30 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது ஏ.எஸ் பன்னீர்செல்வம் என்பவர் எழுதிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை பரிசாக அளித்த அவர் சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

இதனையடுத்து தமிழக முதக்வரின் அழைப்பினை ஏற்று குடியரசுத் தலைவர் முர்மு 5.6.2023 அன்று சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்கிறார்.