போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கும் அந்த குடும்பம் தமிழகத்திற்கு வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் மறைமுக சாடல்..!!

0
249

போதைப்பொருள் மூலம் சம்பாதிக்கும் அந்த குடும்பம் தமிழகத்திற்கு வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் மறைமுக சாடல்..!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நர்சிம்மனை ஆதரித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒசூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் திமுகவை மறைமுகமாக தாக்கி பேசியிருப்பது பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.

அதன்படி நிர்மலா சீதாரமன் கூறியதாவது, “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தால் ஒவ்வொரு குடும்பமும் எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் என்பதை நாம் பார்த்து வருகிறோம். அந்த ஒரு குடும்பம் மட்டும் வாழ வேண்டும் என்பதற்காக போதைப்பொருட்களை இறக்குமதி செய்து இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் அந்த குடும்பத்தை மீண்டும் ஒருமுறை தேர்வு செய்யக்கூடாது,

சமீபத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாஃபர் சாதிக் அந்த குடும்பத்தோடு நேரடி தொடர்பில் இருப்பவர் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. போதைப்பொருட்கள் மூலம் கோடி கோடியாய் சம்பாதித்து தங்களின் குடும்பம் மட்டும் நன்றாக வாழ வேண்டுமென நினைக்கிறார்கள். இப்படி போதைப்பொருள் மூலம் பிழைக்கக்கூடிய எந்த ஒரு குடும்பமும் நன்றாக வாழ்ந்ததில்லை.

மக்களின் வாழ்க்கையை கெடுத்து, நாளைய எதிர்காலமான இளைஞர்களின் எதிர்காலத்தை போதைக்கு அடிமையாக மாற்றி அதன் மூலம் கிடைக்கும் வருமானம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இங்குள்ள எந்த ஒரு குடும்பத்திற்கும் வேண்டாம். எனவே அதை வைத்து அரசியல் செய்யக்கூடிய அந்த குடும்பத்தை நாம் மொத்தமாக நிராகரிக்க வேண்டும்” என திமுகவை மறைமுகமாக சாடியுள்ளார்.

Previous articleமெட்ரோ பணியால் விபத்தில் சிக்கிய சன் டிவி சீரியல் நடிகை…. அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா ??
Next articleவிஜய்க்கே தெரியாமல் பேரம் பேசிய தவெக நிர்வாகிகள்..உச்சக்கட்ட கோபத்தில் அதிரடி முடிவெடுத்த விஜய்..!!