தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு போட நினைப்பவர்களுக்கு தமிழக மின்சார வாரியம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதன்படி புதிதாக மின் இணைப்பு போட நினைப்பவர்களுக்கு 3 முதல் 7 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கிட வேண்டும் என்றும் அதற்கான வரையறைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டிருக்கிறது.
கடைகள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு ஒருவருக்கு 3 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கிடவும் புதிய மின்கம்பங்கள் நடுவதற்கான வேலைகள் இருப்பின் 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்புகளை வழங்கிடவும் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது.
குறிப்பாக, மேல்நிலை கேபிள்கள் உள்ள இடத்தில் நிலத்தடி கேபிள்கள் அமைத்து தர கேட்கும்பொழுது அதிக அளவு பணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்திருப்பதாகவும், அவ்வாறு அதிக பணம் வசூலிக்க கூடியவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் சென்னை மட்டுமல்லாது பல இடங்களில் மின் கட்டணத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.