தமிழக அரசு அறிவிப்பு!! நாளை முதல்  500 மது கடைகள் இயங்காது!!

0
92
Tamil Nadu Government Announcement !! 500 liquor shops will not function from tomorrow!!
Tamil Nadu Government Announcement !! 500 liquor shops will not function from tomorrow!!

தமிழக அரசு அறிவிப்பு!! நாளை முதல்  500 மது கடைகள் இயங்காது!!

தமிழ்நாட்டில் 500 மது கடைகள் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளது   என்று செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.தற்பொழுது அவர்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் திடீரென்று  இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இப்பொழுது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் 500 மது கடைகள் மூடுவதற்கான தகவல் வெளிவந்த நிலையில் கலைஞர் நினைவு நாளையொட்டி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி இதனை உறுதிபடுத்தினார்.

அறிவிக்கப்பட்ட 500 மது கடைகளில்  சில்லறை மதுபான கடைகளை கண்டறிந்து மூடப்படும் என்று இருந்த நிலையில் கடந்த 20 ம் தேதி அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

அந்த அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் தற்பொழுது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள மது கடைகளில் சில்லறை விற்பனை கடைகளை அறிந்து 22 ம் தேதி அவை அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதல் மதுபான கடை 2003 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 7000  மது கடைகளாக இருத்த நிலையில் அது தற்பொழுது 5500 கடைகள் உள்ளது. இது பல்வேறு காரணங்களால் குறைக்கப்பட்டது.

அதில் 500 மது கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சில்லறை விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்படுவதாகவும், கோவில் மற்றும் பள்ளிகளுக்கு அருகே இருக்கும் கடைகளும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடைகளை மூடுவதர்க்கான பணியை அமைச்சர் முத்துசாமி துடங்கி வைத்துள்ளார்.

author avatar
Parthipan K