தமிழக அரசு: மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு! இனி இந்த நடைமுறைகளை தான் பின்பற்ற வேண்டும்! 

Photo of author

By Rupa

தமிழக அரசு: மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு! இனி இந்த நடைமுறைகளை தான் பின்பற்ற வேண்டும்!

தமிழகத்தில் தொற்று பாதிப்புகளால் பல ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்பொழுது தான் வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த நிலையில்  பல மாணவர்கள் படிப்பில் பின்னோக்கிய நிலையில் உள்ளனர். இவர்களுக்காக வீடு தேடி கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். இருப்பினும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் குடும்ப சூழலால் சில மாணவர்களால் பள்ளிக்கு செல்ல இயலவில்லை.

இவ்வாறான காரணங்களால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில்லை.இதனால்   இடைநிற்றலை குறைக்க தமிழக அரசு சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. குறிப்பாக தொலைதூரக் கல்வி பயில்வோர், மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், கிராமங்களில் இத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளனர். இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு காலை நேரத்தில் அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, பொங்கல், சாம்பார் ரவா கிச்சடி சேமியா கிச்சடி ஆகியவை வழங்க உள்ளனர்.

அதேபோல மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த ஒரு டம்ளர் பால் வழங்கும் படியும் தமிழக அரசை பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மாணவர்களுக்கு உணவு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பதை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும்.

அதேபோல தரமுள்ள உணவு வகைகளையே மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு பட்டியலிடும் காலை உணவுகளை சரியாக அளிக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். அந்தந்த பள்ளி ஆசிரியர்களும் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்களும் சுழற்சி முறையில் அங்கு செய்யப்படும் உணவுகளின் தரத்தையும் அதன் சுவையையும் அன்றாடம் அறிந்துகொள்ள வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.